Connect with us
MN. Nambiyar

Cinema History

ஆறு மணிக்கு மேல கண்ணு தெரியாது!. சீக்கிரம் அனுப்பிடுங்க!.. அதிர்ச்சி கொடுத்த நம்பியார்..

நம்பியார் மாதிரி ஒரு நடிகரை நான் வாழ்க்கையிலயே சந்தித்தது கிடையாது. மறக்க முடியாத சம்பவவம். எந்த நடிகரும் அப்படி ஒரு வேலையை செய்ய முடியாது என்று சுந்தரி பிலிம்ஸ் தயாரிப்பாளர் முருகன் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

வின்னர் படத்துல நம்பியார் நடிச்சாரு. அது பஞ்சாயத்து முடிஞ்சி நாங்க தான் சூட் பண்ணினோம். அவரு எல்லா வருஷமும் ஒரு மாசம் அவுட்டோர் போய் ரெஸ்ட் எடுக்கப் போயிடுவாரு. தேவர் பிலிம்ஸ் முருகன் தான் புரொடக்ஷன் பண்ணினாரு. ஒன்றரை லட்சம் பாக்கி இருந்தது. அவருக்கிட்ட பணத்தை எடுத்துட்டுப் போய் கொடுக்கறோம். ‘வாங்க மாட்டேன்’னுட்டார். ‘நாளைக்கு காலைல 6 மணிக்கு ஊட்டிக்குப் போறேன்.

இதையும் படிங்க… எனக்கு மட்டும்தான் பாட்டு போட்டாரா இளையராஜா?!.. கோபத்தில் பொங்கிய ராமராஜன்…

ஒரு மாசம் ரெஸ்ட் எடுத்துட்டுத் தான் வருவேன். நீங்க காசைக் கொடுத்துட்டு நான் டப்பிங் பேச வரலேன்னா எனக்குக் கெட்டப் பேரா ஆயிடும்’னு சொன்னார். ‘இல்ல சாமி இந்தப் படமே பஞ்சாயத்துல எடுக்கறோம். ஏகப்பட்ட பிரச்சனை. இதை டப்பிங் முடிச்சாத் தான் நாங்க ரிலீஸ் பண்ண முடியும். தயவு செய்து ஹெல்ப் பண்ணுனா நல்லாருக்கும் சாமி’ன்னு சொன்னேன்.

‘சரி. பஞ்சாயத்துன்னு சொல்றீங்க. காசை கொடுங்க. ஆனா இப்ப வர முடியாது. நாலு மணில இருந்து 6 மணிக்குள்ள என்னோட வேலையை முடிச்சிட்டு அனுப்பிடணும்’னு சொன்னார். ‘அதனால நாலு மணிக்கு கரெக்டா வண்டியை அனுப்புங்க… 6 மணிக்கு மேல கண்ணு தெரியாது.

இதையும் படிங்க… நாலு நாள் நடித்த அந்தப் படத்துக்காக தேம்பி தேம்பி அழுத சரத்குமார்… அப்படி என்னதான் நடந்தது?

காலைல 6 மணிக்கு ஊருக்குப் போகணும்.’ அப்படின்னு சொன்னார். ஆனா அது எப்படியோ மறதில காரை அனுப்ப தயாரிப்பாளர் மறந்துட்டாரு. உடனே நான் வண்டியை எடுத்துட்டு 5.45க்குப் போறேன். போயி அவரு கால்ல விழுந்துட்டேன். ‘மன்னிச்சிக்கோங்க சாமி’ன்னு சொன்னேன்.

அவரு சேரை எடுத்து வீட்டு வாசல்ல போட்டு விட்டு குடையைப் பிடிச்சிக்கிட்டு உட்கார்ந்துருக்கார். என்னைப் பார்த்ததும் ‘இதுக்குத் தான் நான் பணத்தை வாங்க மாட்டேன்னு சொன்னேன். எனக்கு வயசாயிடுச்சு. வீட்டுக்குள்ள இருந்தா 6 மணிக்குலாம் தூங்கிடுவேன்.

அப்புறம் காலைல தான் எழுந்திருப்பேன். நாலரை மணில இருந்து உங்களுக்காக இப்படி உட்கார்ந்துருக்கேன்’னு சொன்னார். ஆனால் டப்பிங் முடிச்சி 9 மணிக்குத் தான் வந்தாரு. அப்படி ஒரு நடிகரை இப்போ பார்க்க முடியுமா..? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top