Cinema News
ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடியா?!.. மொத்த பட்ஜெட்டும் வந்துடுச்சே!.. கோலிவுட் கத்துக்கணும்!..
முன்பெல்லாம் தியேட்டர்களில் வருவது மட்டுமே முக்கிய வசூலாக இருந்தது. எனவே, தயாரிப்பாளர்கள் அதை மட்டுமே டார்கெட் செய்வார்கள். அதோடு, 80, 90களில் ஒரு படம் தியேட்டரில் வெளியானால் குறைந்தபட்சம் 25 நாட்களாவது ஓடும். படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் தியேட்டரிலிருந்து தூக்கமாட்டார்கள்.
ஆனால், வருடங்கள் செல்ல செல்ல தியேட்டரில் வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனவே, படம் நன்றாக இல்லையெனில் ஒரு வாரத்தில் தூக்கிவிடுகிறார்கள். இது நெகட்டிவ் என்றாலும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டது.
இதையும் படிங்க: அஜித்திடம் சரண்டர் ஆவதை தவிர வேற வழியில்ல!.. கை மாறும் ஏகே 64.. அப்போ ஹிந்தி கனவு?!..
தியேட்டரில் வெளியான படங்கள் 3 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகிறது. அதற்காக கணிசமான தொகையை ஓடிடி நிறுவனங்கள் கொடுக்கிறது. அந்த தொகையில் ஹீரோவுக்கு சம்பளம் கொடுத்துவிடலாம். எனவேதான், படத்தின் வியாபாரத்தில் தற்போது ஓடிடி நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே ஓடிடி நிறுவனங்கள் நல்ல விலைக்கு வாங்கி விடுகின்றன. இதனால், பெரிய ஹீரோக்கள் தங்களின் சம்பளத்தை ஏற்றிவிட்டனர். விஜயின் சம்பளம் 200 கோடியும், அஜித்தின் சம்பளம் 100 கோடியை தாண்டியதற்கும் இதுதான் காரணம்.
இதையும் படிங்க: வெற்றிமாறன் எழுதலை… சூரி பெயர் போடலை… என்னங்க குழப்புறீங்க… இயக்குனர் சொன்ன சீக்ரெட்…
ஒருபக்கம், பல மொழிகளிலும் வெளியாகும் பேன் இண்டியா படங்கள் மிகவும் அதிகவிலைக்கு வாங்கப்படுகிறது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரவேற்பை பெற்றதால் இப்போது புஷ்பா 2 உருவாகி வருகிறது.
இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் 250 கோடிக்கு வாங்கி இருக்கிறதாம். அதேபோல், இப்படத்தில் தொலைக்காட்சி உரிமை 135 கோடிக்கு விலை போயிருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் 440 கோடி என சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமை இரண்டுமே கிட்டத்தட்ட பட்ஜெட்டில் 80 சதவீதத்தை வாங்கி கொடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கரு நன்றாக இருந்தால் நல்ல விலை போகும் என்பதை டோலிவுட்டிடம் கோலிவுட் கற்றுகொள்ள வேண்டும் என்கிறார்கள் சினிமா பத்திரிக்கையாளர்கள்.. அதுவும் சரிதான்!..