
Cinema News
மாமியாரு முன்னாடியே அந்த மாதிரி சீன்ல நடிச்ச நிழல்கள் ரவி… ‘ஐயையோ… அவங்க என்ன நினைச்சிருப்பாங்க’..?!
Published on
நிழல்கள் ரவி ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என பல கேரக்டர்களில் நடித்து தன் திறமையைக் காட்டியவர். பிரபல நடிகரும், டப்பிங் ஆர்டிஸ்டும், மிமிக்ரி கலைஞருமான நிழல்கள் ரவி தனது திரையுலக வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை நடிகர் ராஜேஷிடம் யூடியூப் சேனல் ஒன்றில் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
இப்ப உள்ள யங் ஜெனரேஷன் சினிமாவுக்காக நல்லா டெடிகேட் பண்றாங்க. பத்து கிலோவ கூட்டுறது, குறைக்கிறது… ‘6 பேக்… 8 பேக்… 9 பேக்’னு வைக்கிறாங்க. முன்னாடி கமல்ஹாசன் தான் வெயிட்டைக் கூட்டுவாரு. குறைப்பாரு. நம்ம எல்லாம் ஆச்சரியமா பார்த்தோம்.
இதையும் படிங்க… லட்சத்துக்கே நடிப்பை கொட்டுவாரு… இதுல கோடியா? கருடன் படத்தில் வைரலாகும் சூரியின் சம்பளம்…
சிவாஜி கணேசன் காலத்துல எல்லாம் கத்துக்கிட்டு ரெடியா வந்தாங்க. நம்ம ஜெனரேஷன்ல குறிப்பிட்ட ஆளுங்க தான் கத்துக்கிட்டாங்க. இப்ப உள்ள ஜெனரேஷன் எல்லாரும் கத்துக்கிடறாங்க.
என் வைஃப் எல்லாம் பேசியாச்சு. நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு. அவங்க மகாராஷ்டிரா நாக்பூர்ல இருந்து வந்துருக்காங்க. எங்க சூட்டிங்னு கேட்டாங்க. சௌகார் ஜானகி அம்மா வீடு. எல்லாரும் அங்க வந்துட்டாங்க. ஹால்ல என்ன சீன்னு பாருங்க. நான், வி.கே.ராமசாமி, நளினிகாந்த், ஆர்.எஸ்.மனோகர் என நாலு பேரும் சேர்ந்து ஒரு பொண்ணை ரேப் பண்ணனும்.
பாலாஜி தயாரிப்பு. ‘நிரபராதி’ன்னு ஒரு படம். நான் ஸ்டைலா கையில ஒரு கிளாஸ், சிகரெட்டோட இருக்கேன். என்னடி எங்கே ஓடப்பார்க்குற… ஓடிட்டா நாங்க விட்டுருவோமோன்னு நான் டயலாக் பேசறேன்.
‘நான் தான் அப்பவே சொன்னேனே…’ன்னு விகே.ராமசாமி சொல்வாரு. அப்புறம் அந்தப் பொண்ணு விட்டுருங்க… விட்டுருங்கன்னு கத்துவாங்க. விட்டுருங்கன்னா விட்டுருவோமா…ன்னு நான் சொல்ல கட் கட்னு சொல்லிட்டாங்க. பார்த்தா சுத்தி எல்லாரும் நிக்கிறாங்க.
என்னோட மாமனாரு, மாமியாரு, பொண்டாட்டி எல்லாம். சப்த நாடியும் அடங்கிடுச்சு. வீட்டுக்குப் போனா கேன்சல் ஆயிடும். நல்ல மாப்பிள்ளையைப் பார்த்திருக்கீங்களேன்னு சொல்வாங்கன்னு நினைச்சேன். அப்புறம் ரசிச்சாங்க. படிச்சவங்க புரிஞ்சிக்கிட்டாங்க. ஆக்டிங்னு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… எங்கடா! லட்டு மாதிரி அஜித்-விஜய் படங்கள் கிடைச்சா மிஸ் பண்ணுவேனா? ஷாக் கொடுத்த சாய் பல்லவி!..
1984ல் கே.விஜயன் இயக்கத்தில் வெளியான படம் நிரபராதி. கே.பாலாஜி தயாரித்துள்ளார். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். மாதவி, சில்க், அனுராதா, நிழல்கள் ரவி, வி.கே.ராமசாமி, சங்கிலி முருகன், மனோரமா, நளினிகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். கெஸ்ட் ரோலில் மோகன் நடித்துள்ளார். சுரேஷ்கோபிக்கு இது தான் அறிமுக படம்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...
SK Pradeep: தமிழ் சினிமாவில் தற்போது பேசப்படும் நடிகராக மாறியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் அரசியலுக்கு போன பிறகு சிவகார்த்திகேயன் மவுசு...
சின்னத்திரையில் சிகரம் தொட்ட சிவா : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு...
Vijay: தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முதல் நடிகராக விஜய் இருக்கிறார் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் அதற்குரிய முக்கிய...
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...