Cinema History
நான் வெறும் குதிரை!.. எனக்கு மரியாதையே இல்ல!.. ரசிகர்களிடம் அன்றே சொன்ன ரஜினி!…
ரசிகர்களிடம் ஒரு நடிகர் சுலபமாக ரீச் ஆவதற்கு சினிமேவே முக்கிய உதாரணம். சினிமா மூலம் ஒரு நடிகர் பல கோடி ரசிகர்களை பெற்ற சம்பவம் எல்லா மொழியிலும் நடந்திருக்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமாராவ், ராஜ்குமார், ரஜினி, கமல், விஜய், அஜித் என சொல்லிக்கொண்டே போகலாம்.
ஹாலிவுட்டிலெல்லாம் ஒரு நடிகரை இந்த அளவுக்கு கொண்டாட மாட்டார்கள். ஜான் விக் பட நடிகர் கேனு ரீவிஸ் சாதரணமாக லோக்கல் டிரெயினில் நின்று கொண்டு பயணிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பல முறை வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் நடிகர்களுக்கு இருக்கும் கிரேஸ் வேறு.
இதையும் படிங்க: ரஜினியோட அந்தப் படம் 3 படையப்பாவுக்குச் சமமா..? அப்புறம் ஏன் மிஸ் ஆச்சு?
நடிகர்களை சூப்பர்மேனாகவும், தங்களை காக்க வந்த கடவுள் போலவும் பார்க்கும் மனப்பாண்மை இந்திய சினிமா ரசிகர்களுக்கு உண்டு. குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னட மொழி ரசிகர்களுக்கு இது பொருந்தும். ரசிகர்கள் அப்படி நடந்துகொள்வதால் அந்த நடிகர்களும் கர்வத்துடனே வலம் வருவார்கள். ஆனால், நடிகர் ரஜினி இதிலிருந்து மாறுபட்டவர். தான் யார் என்பது அவருக்கு தெரியும்.
இந்த புகழ் எல்லாம் நாளை வேறு ஒருவருக்கு போய்விடும் என்பதை அப்போதே உணர்ந்தவர் அவர். பிளாட்பார்மில் தூங்கிய சிவாஜி ராவ்தான் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஒருமுறை ஒருவிழாவில் அவர் கலந்துகொண்டபோது அவரின் ரசிகர்கள் ‘சூப்பர்ஸ்டர் சூப்பர்ஸ்டார்’ என கத்தினார்கள்.
இதையும் படிங்க: ரஜினிகாந்தை அசிங்கப்படுத்த அந்த வசனம் வச்சீங்களா?.. ‘அஞ்சாமை’ பட இயக்குனர் அந்தர் பல்டி!..
அப்போது பேசிய ரஜினி ‘நான் குதிரை மாதிரி. நீங்கள் என் மீது அமர்ந்து சவாரி செய்பவர்கள். நீங்கள் இருக்கும் வரைதான் எனக்கு மரியாதை. உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன் ஒரு கோவில் விழாவுக்காக குதிரை மீது சாமியை வைத்து ஊர்வலம் போனார்கள். எல்லோரும் குதிரையின் முன்பு விழுந்து வணங்கினார்கள். இதனால் குதிரை மிகவும் சந்தோஷப்பட்டது.
கோவில் வந்ததும் சாமியை உள்ளே எடுத்து போய்விட்டனர். எல்லோரும் சாமி பின்னால் போய்விட்டனர். குதிரை கோவிலுக்கு வெளியே ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போதுதான் தான் யார் என்பது குதிரைக்கு புரிந்தது. என் நிலையும் இதுதான். ரசிகர்கள் இருக்கும் வரைதான் ஒரு நடிகனுக்கு மரியாதை’ என சொன்னார் ரஜினி. தான் யார் என்பதை ரஜினி போல் இந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கும் நடிகர் ஒருவர் இருப்பாரா என்பது தெரியவில்லை.