இந்தியன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!. கோட்டை விட்டு புலம்பிய நடிகை!.. அட அவரா?!…

Published on: June 11, 2024
indian
---Advertisement---

ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், ஊர்மிளா, மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்து 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். லஞ்ச, ஊழலுக்கு எதிராக சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் களமிறங்கி களையெடுப்பதுதான் இப்படத்தின் ஒருவரிக் கதை.

மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் உருவானது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் இப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அக்கடான்னு நாங்க உடை போட்டா, மாயா மச்சிந்த்ரா, பச்சைக்கிளிகள் தோளோடு, டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா போன்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜிடம் வாய்ப்பு கேட்ட சத்தியராஜ்!.. விக்ரமுல விட்டதை கூலில பிடிச்சிட்டார்!..

இப்படத்தில் கமலின் மகளாக நடிகை கஸ்தூரி நடித்திருந்தார். காவல்துறை அதிகாரியாக மறைந்த நடிகர் நெடுமுடி வேணு நடித்திருந்தார். இப்படத்திற்கு சுஜாதா மிகவும் கூர்மையான வசனங்களை எழுதி இருந்தார். இந்த படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அரசு அலுவலகங்களில் நிகழும் லஞ்சங்களை கண்ணாடி போல படம் பிடித்து காட்டியிருந்தார் ஷங்கர்.

பல வருடங்களுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகியுள்ளது. இதில் கமல், சித்தார்த், பிரியா பவானி சங்கர் என பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை லைக்கா நிறுவனத்தோடு இணைந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரித்திருக்கிறது.

Soundarya
Soundarya

இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இந்தியன் முதல் பாகத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஊடகம் ஒன்றில் பேசியப்போது ‘ஊர்மிளா நடிக்கவிருந்த வேடத்தில் ஒரு தென்னிந்திய நடிகையைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம். மறைந்த நடிகை சௌந்தர்யாவை நடிக்க வைக்க நினைத்தோம். அப்போது அவர் தெலுங்கில் பிசியாக நடித்து கொண்டிருந்தார். அதனால், அவரால் நடிக்க முடியவில்லை.

ஆனால், இந்தியன் படத்தை தெலுங்கு மொழியில் பார்த்த அவர் ‘இந்த படத்தை மிஸ் பண்ணி விட்டேன்’ என என்னிடம் சொன்னார். ரங்கீலா படத்திற்கு ரஹ்மான் இசையமைத்த போது ஊர்மிளாவை பார்த்துவிட்ட அவரை ஷங்கரிடம் ரெக்கமண்ட் செய்தார். அதன்பின்னரே இந்தியன் படத்தில் ஊர்மிளா நடித்தார்’ என ஏ.எம்.ரத்னம் கூறினார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.