Cinema History
ரஜினியிடம் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்த கவுண்டமணி… ஆனா அவரு சொன்னது அப்படியே நடந்துடுச்சே..!
நாடக உலகில் இருந்து சினிமா உலகிற்குள் நுழைந்தவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. 11 வருடங்கள் மேடை நாடகங்களில் நடித்தாராம். தினமும் நாடகக்கம்பெனில என்ன உணவோ அதை சாப்பிட்டுத்தான் காலத்தை கழித்துள்ளார்.
இதையும் படிங்க… ஒன்னு ரெண்டு இல்ல.. விஜயுடன் பல முறை சேர்ந்து டூயட் ஆடிய நடிகைகளின் லிஸ்ட்.. ஐயோ சிம்ரன் நீங்கதான் பெஸ்ட்
ஒரு நாள் அங்கு சாப்பிட வழியில்லாமல் போனால் அன்னைக்கு முழுவதும் இவர் பட்டினி தானாம். அவரோட 26வது வயதில் தான் திரையுலகில் நுழைந்து நடிக்க சின்ன வாய்ப்பு கிடைச்சுதாம். நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் தான் வந்து போவார். மற்றபடி அதுல அவருக்கு வசனமே கிடையாது.
சினிமாவுக்குள் நுழைந்தால் வசதியா இருக்கலாம்னு நினைச்சவருக்கு அங்கும் ஏமாற்றம். சின்ன சின்ன வேடம் தான் கிடைத்ததாம். எந்த மரியாதையும் கிடையாது. பல அவமானங்களை சந்தித்தாராம்.
இப்படியே 12 வருடங்கள் ஓடிவிட்டதாம். படப்பிடிப்பு முடிந்தால் பெரிய பெரிய நடிகர்களுக்குத் தான் அழைத்துச் செல்ல கார் வருமாம். பழைய வாகனம் ஏதாவது வந்தால் பத்தோடு பதினொன்றாக இவரையும் ஏற்றிச் செல்வார்களாம். அதுவும் பல நேரங்களில் வராதாம். நடந்து தான் போகணுமாம்.
அப்படி ஒரு தடவை நடந்து சென்ற போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரைப் பார்த்து என்ன நடந்து வர்றீங்கன்னு கேட்டாராம். அப்போது கவுண்டமணி தன்னோட மனக்குமுறல்களை எல்லாம் அவரிடம் கொட்டித் தீர்த்தாராம். அதைப் பொறுமையாகக் கேட்ட ரஜினி, ‘கவலைப்படாதீங்க. உங்களுக்கும் காலம் வரும். அது சீக்கிரத்தில் வரும். 7 நாள்களும் 7 கார்களில் நீங்க வருவீங்க’ன்னு சொன்னாராம்.
அவரு சொன்ன காலமும் வந்தது. கவுண்டமணியும், செந்திலும் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவு அவர்கள் வளர்ந்து விட்டார்கள். அப்போது இவர்களை காமெடி இரட்டையர்கள் என்றே அழைத்தனர். கவுண்டமணி 10க்கும் மேற்பட்ட கார்களை வாங்கினாராம்.
இதையும் படிங்க… ரஜினி பாட்டைப் பாடியதற்காக வருத்தப்பட்ட எஸ்பிபி… அப்படி என்னதான் நடந்தது?
சூட்டிங்கிற்கு தினமும் ஒரு காரில் வருவாராம். இதுவரை 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டாராம். இதில் 12 படங்களில் அவர் தான் ஹீரோ. இன்று வரை இவர் ஹீரோவாக நடிப்பது தொடர்கிறது. இப்போது அவர் ஹீரோவாக நடித்து வரும் படம் ஒத்த ஓட்டு முத்தையா என்பது குறிப்பிடத்தக்கது.