கடனை அடைக்க முடியாமல் விபரீத முடிவை எடுத்தாரா விஷால்? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

Published on: June 23, 2024
vishal
---Advertisement---

Actor Vishal: சினிமாவில் எப்படியாவது தனக்கென ஒரு முத்திரையை பதிக்க வேண்டும் என போராடும் நடிகர்கள் ஏராளமான பேர். அதில் விஷாலும் ஒருவர். என்னதான் ஒரு ஆக்சன் ஹீரோவாக இருந்தாலும் விஜய் அஜித் சூர்யா இவர்கள் அளவுக்கு அவரால் மக்கள் மத்தியில் ஒரு தனித்துவமான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.

அதற்கு ஏற்ற வகையில் அவருடைய படங்களும் அவருக்கு கை கொடுக்க வில்லை. சமீபத்தில் வெளியான ரத்னம் திரைப்படம் கூட பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது .ஆனால் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் சுக்குநூறாக்கியது அந்த திரைப்படம். நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மட்டுமே அவருக்கு கை கொடுத்தது.

இதையும் படிங்க: எந்த கெட்ட பழக்கமும் இல்ல!.. பொண்ணுங்களையாவது ரசிப்பீங்களா?!.. எம்.ஜி.ஆரை வம்பிழுத்த இயக்குனர்!..

அதுவும் எஸ் ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பும் சேர்ந்து அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது.  இந்த நிலையில் விஷால் ஏகப்பட்ட கடனில் சிக்கி இருப்பதாகவும் அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதாகவும் ஏற்கனவே சில பல பத்திரிகைகள் தகவலை வெளியிட்டிருந்தன. அதில் குமுதம் பத்திரிக்கையில் ’விஷால் தன்னுடைய கடனையும் தன் அப்பாவின் கடனையும் அடைக்க முடியாமல் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகி விட்டதாகவும், அதனால் அவர் லண்டனில் ஐ சி யூ வில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும்’ செய்தியை வெளியிட்டு இருந்ததாம்.

இதைப் பற்றி ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம்  ‘இது உண்மையா’ என கேட்டார். இதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன்  ‘குமுதம் வெளியிட்ட அந்த செய்தியில் உண்மைத்தன்மை இருப்பதாக தெரியவில்லை’ என பதில் கூறியிருக்கிறார். விஷாலை பொருத்தவரைக்கும் அவன் இவன் படத்திற்குப் பிறகு அவருடைய உடல் நிலையில் சில பல மாற்றங்கள் ஏற்பட்டது உண்மைதான்.

இதையும் படிங்க: திடீரென மதம் மாறிய திலீப்!.. கடைசி நேரத்தில் ரோஜா பாட டைட்டிலில் மாற்றப்பட்ட பெயர்!..

அதிலிருந்தே அவருடைய பேச்சு, தோற்றம் எல்லாமே மாறிவிட்டது. அதற்காக போதை பொருள் அளவுக்கு அவரை கொண்டு செல்வது என்பதை அநியாயம். ஏற்கனவே சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் அவலங்களை தட்டிக் கேட்கும் ஒரு சமூக சேவை மனப்பான்மை உள்ள நடிகராக விஷால் இருந்து வருகிறார் .அப்படி இருக்கும்போது அவரைப் பற்றி இந்த மாதிரி தேவையில்லாத செய்திகளை பரப்புவது மிகவும் தவறு.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.