Connect with us

Cinema News

3 நாளா முக்கும் கோட் மினி டீசர்!.. பெருசா வியூஸ் கூட வரலை!.. விஜய் ஃபேன்ஸுக்கே பிடிக்கலையா?..

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரேயடியாய் ஹைப் குறைந்துவிட்டது என்கின்றனர். சினிமாவில் இருந்து விஜய் விலகப் போகிறார் என்பது தெரிந்த பின்னர் பல சினிமா ரசிகர்கள் மற்ற நடிகர்களுக்கு ரசிகர்களாக மாறிவிட்டதாக கூறுகின்றனர்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12:00 மணிக்கு வெளியான கோட் ஷாட்ஸ் எனும் கோட் படத்தின் மினி டீசர் வெளியாகி மூன்று நாட்களாகியும் இன்னமும் 10 மில்லியன் வியூஸ் கூட வரவில்லை என்பது ஏஜிஎஸ் தரப்பை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி இருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: எல்லா அழகும் சும்மா பொங்கி வழியுதே!.. நைட் தூக்கத்தை கெடுக்க வந்த அரண்மனை பேய் தமன்னா!..

பிகில் படத்தில் அட்லீ செய்தது போல எக்கச்சக்கமாக பட்ஜெட்டை எகிற வைத்து வெங்கட் பிரபு ஏகப்பட்ட நடிகர்கள் மற்றும் சிஜி காட்சிகள் என 300 கோடிக்கும் மேல் செலவு செய்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். ஆனால், பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக விஜய் படங்கள் சொதப்பி வரும் நிலையில் கோட் படத்திற்கு பிசினஸ் பெரிதாக ஆகவில்லை என்றும் கூறுகின்றனர்.

யூடியூப் சாதனைகளை விஜய் படத்தின் மோஷன் போஸ்டர் வந்தாலே முறியடிக்கும். ஆனால், கோட் படத்தின் ஷாட்ஸ் வீடியோவில் 2 விஜய்யை காட்டியும் வெறும் 9 மில்லியன் வியூஸ் தான் இதுவரை வந்துள்ளது.

இதையும் படிங்க: காத்திருக்கும் நெல்சன்!.. குறுக்கே கெளஷிக்கா உள்ளே நுழையும் அட்லீ!.. கூலிக்கு அடுத்து பெரிய சம்பவம்?

மேலும், யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் மற்றும் பவதாரணியின் ஏஐ வாய்ஸ் பாடிய சின்ன சின்ன கண்கள் பாடலுக்கும் 2 நாட்களில் வெறும் 6 மில்லியன் வியூஸ் தான் வந்திருக்கிறது.

யங் விஜய்யின் சிஜி காட்சிகளும் ரசிகர்களுக்கு பெரிதாக திருப்தி இல்லாத நிலையில், கோட் படம் விஜய்க்கு வெற்றியை கொடுக்குமா என்பதே சந்தேகமாக இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. சம்பளம் மட்டும் 200 கோடி, 250 கோடி என வாங்கும் விஜய் அதற்கு வொர்த்தான படத்தை கொடுக்கிறாரா? என்றால் பதில் இல்லை என்று தான் வருகிறது.

இதையும் படிங்க: ஒரே குடியிருப்பில் விஜய், த்ரிஷா! அந்த போட்டோவுக்கு பின்னனியில் இப்படி ஒரு காரணம் இருக்கா?

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top