Connect with us
simbu

Cinema News

தலைவன் எப்போதும் வேற ரகம்! கையேந்தி நின்ற வெங்கல் ராவுக்கு முதல் ஆளாக ஓடி உதவிய சிம்பு

Actor Simbu: தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் நலிவடைந்த கவிஞர்கள் பெரும்பாலும் தங்கள் அடுத்த கட்ட வாழ்வாதாரத்திற்கு அடுத்தவர்களை கையேந்தி நிற்கும் நிலையில் தான் இருந்து வருகிறார்கள். அதனால் சில அமைப்புகள் சேர்ந்து நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதம் இவ்வளவு தொகை என பண உதவிகளை செய்து அவர்களை காப்பாற்றியும் வருகிறார்கள்.

அதையும் தாண்டி பெரிய அளவில் அவர்கள் பாதிப்படையும் போது என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கதியாக நிற்கின்றனர். அந்த வகையில் காமெடி நடிகர்களில் பெரும்பாலான நடிகர்களின் நிலைமை இப்படி தான் மாறி இருக்கிறது .சமீபத்தில் கூட பிரபல காமெடி நடிகர் வெங்கல்ராவ் திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: விஜயை தாண்டிய கமல்!.. இந்தியன் 2 பட டிரெய்லர் வீடியோ வியூஸ் எவ்வளவு தெரியுமா?!..

அவருடைய கை கால்கள் செயலிழந்து வீட்டிலேயே முடங்கி கிடப்பதாகவும் அடுத்த வேலை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பதாகவும் சினிமா பிரபலங்கள் யாரேனும் தனக்கு உதவி செய்யும்படியும் நேரடியாக ஒரு வீடியோ மூலம் தன்னுடைய வேதனையை தெரிவித்திருந்தார். இவர் வடிவேலுவுடன் ஒரு சில படங்களில் நடித்திருந்தவர்.

இதே மாதிரியான ஒரு நிலைமையில் தான் நடிகர் போண்டாமணியும் இருந்தார். இலங்கையைச் சேர்ந்த போண்டாமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சிகிச்சைக்கு ஒரு சில நடிகர்கள் உதவி செய்திருந்தனர். ஆனாலும் சமீபத்தில் தான் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: இவரா பார்ட்டி வச்சு கொண்டாடினது? ‘பாபா’ தோல்வி எந்தளவுக்கு விஜயை பாதிச்சிருக்கு பாருங்க

அதேபோல் அல்வா வாசுவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். இவர்கள் வரிசையில் பாவா லட்சுமணனும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சின்னத்திரை பிரபலம் கேபிஒய் பாலா உள்பட பலபேர் உதவினார்கள். இப்போது அவர் நலமுடன் இருக்கிறார். இந்த வரிசையில் இப்போது வெங்கல்ராவும் இணைந்து இருக்கிறார் .

ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். 30 வருடங்களுக்கு மேலாக இந்த தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் வெங்கல்ராவ். இந்த நிலையில் அவருடைய ஒரு கை மற்றும் கால் செயல் இழந்து விட்டதாகவும் சரியாக பேச முடியவில்லை எனவும் அதனால் திரையுலகை சேர்ந்தவர்கள் தனக்கு உதவும் படியும் ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.

இதையும் படிங்க: நான் சொல்ற மாதிரி நடின்னு அஜீத்துக்குக் கட்டளையிட்ட இயக்குனர்… இப்படி எல்லாமா நடந்தது?

ஆனால் வீடியோ வெளியிட்டதிலிருந்து யாரும் உதவி செய்தார் போல தெரியவில்லை. ஆனால் இன்று அவருக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு உதவி செய்திருப்பதாக சோசியல் மீடியாவில் அந்த செய்தி வைரலாகி வருகின்றது. கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் சிம்பு அவருடைய மருத்துவ சிகிச்சைக்காக உதவி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் உட்பட மற்ற ரசிகர்களும் சிம்புவின் மனிதாபிமானத்தை நினைத்து அவரை பாராட்டி வருகிறார்கள்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top