Connect with us
Ajith

Cinema History

நான் சொல்ற மாதிரி நடின்னு அஜீத்துக்குக் கட்டளையிட்ட இயக்குனர்… இப்படி எல்லாமா நடந்தது?

1999ல் ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் ‘நீ வருவாய் என’. பார்த்திபன், அஜீத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேவயாணி தான் கதாநாயகி. படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே அருமை.

‘அதிகாலையில் சேவலை எழுப்பி’ பாடலில் அஜீத் அட்டகாசமாக நடித்திருப்பார். ஒரு தேவதை, பார்த்து பார்த்து, பூங்குயில் பாட்டு ஆகிய பாடல்களும் உள்ளன.

நடிகர் பாவா லட்சுமணன் பிரபல தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணனிடம் நீ வருவாய் என படத்தின்போது நடந்த சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

நீ வருவாய் என படத்தை இயக்கியவர் ராஜகுமாரன். சௌத்ரி சாரிடம் கதை சொல்ல அது பிடித்துவிட்டது. படத்தில் முதலில் அஜீத், விஜய் தான் நடிப்பதாக இருந்தது. பார்த்திபன் கேரக்டரில் நடிக்க இருந்தது விஜய்.

Nee varuvai ena

Nee varuvai ena

அவருக்கிட்ட கதை சொன்னதும் ‘அஜீத் எந்த ரோல்ல நடிக்கிறாரு?’ன்னு கேட்டாரு. அதுக்கு அவரோட ரோலைப் பத்தி சொன்னதும் ‘அதை நான் நடிக்கிறேன். அவருக்கு ஹீரோ ரோலைக் கொடுங்க’ன்னு சொன்னாரு. ‘இல்ல சார். இதுதான் அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ன்னு சொன்னதும் அவர் விலகிட்டாரு. அந்த ரோல்ல பார்த்திபன் நடிச்சாரு.

அஜீத் அந்த ரோல்ல ரொம்ப நல்லா நடிச்சிருப்பாரு. அதே மாதிரி அய்யனார் கோவில் பக்கத்துல ‘இந்த ஜிமிக்கி பிடிச்சிருக்கா, இந்த தோடு பிடிச்சிருக்கா’ன்னு தேவயாணி கேட்பாங்க. அதுக்கு அஜீத் ‘எல்லாம் பிடிச்சிருக்கு. உதட்டுக்குக் கீழே மச்சம் இருந்தா இன்னும் ரொம்ப நல்லாருக்கும்’னு அஜீத் சொல்வாரு. இந்த சீனை ஒன்மோர் கேட்டுக்கிட்டே இருந்தாரு ராஜகுமாரன்.

இதையும் படிங்க… என்ன சார் நீங்க!. இப்படி காட்டினாத்தான் படம் பார்க்க வருவாங்க!.. முருகதாஸை அதிரவைத்த நயன்தாரா!..

‘சார் 1மணி நேரத்துல முடிக்க வேண்டிய சீனை ஒன்றரை நாளா எடுத்துக்கிட்டு இருக்கீங்க. சௌத்ரி சாருக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்’னு அஜீத் சொன்னார். ‘சார் நான் சொல்ற மாதிரி நடிங்க சார். நான் இப்போ டைரக்டர். நீங்க நடிகர். நான் என்ன சொல்றனோ அதைக் கேளுங்க’ன்னு சொல்லிட்டார்.

அஜீத்துக்குப் பத்து நாள் தான் கால்ஷீட். அப்புறம் ராஜகுமாரனுக்காக 2 நாள் தங்கி நடிச்சிக் கொடுத்துட்டுப் போனாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

More in Cinema History

To Top