Cinema News
இதுக்கு மேல நடிச்சு என்ன பண்ணப் போறாரு? அவரெல்லாம் ஒரு தலைவரா? ரஜினியை விளாசிய இயக்குனர்
Actor Rajini: தமிழ் சினிமாவில் ரஜினியை இந்த அளவு யாரும் விமர்சித்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு விமர்சனத்தை ரஜினி முன்பு முன் வைத்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் காந்தி. தமிழ் சினிமாவில் என்றும் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருபவர் ரஜினி. கிட்டத்தட்ட 50 ஆண்டுகால சினிமாவை தொட்டிருக்கும் ரஜினியின் புகழ் எட்டுத்திக்கும் பரவி இருக்கிறது.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் இவருக்கு என ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. எங்கு போனாலும் ரஜினிக்கு என்ற ஒரு மாஸ் மிகப்பெரிய அளவில் இருந்து கொண்டு தான் வருகின்றன. இந்த நிலையில் ரஜினி பற்றி கேட்ட கேள்விக்கு தனது காரசாரமான பதிலை கூறியிருக்கிறார் பிரவீன் காந்தி.
இதையும் படிங்க: அஜித் சினிமாவுக்காக பிறந்தவர் அல்ல! அவருடைய நோக்கம் என்ன தெரியுமா? அதான் இப்படியா?
அவரெல்லாம் ஒரு தலைவரா? ஆனால் பழைய தலைவர். இதுக்கு மேல அவர் நடித்து என்ன பண்ணப் போறார்? அரசியலுக்கு வந்திருக்கணும். ஏன்னா அந்த அளவுக்கு ரஜினி ஒரு நல்ல மனுஷன். அவர்கிட்ட நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதை அவர் அரசியலுக்கு வந்து நாள்தோறும் ஒரு சொற்பொழிவு மூலம் நடத்தி இருந்தால் அதுவே மக்களுக்கு ஒரு பாசிட்டிவான வைபாக இருந்திருக்கும் .
இப்போது தமிழ்நாடு நிலைகுழைந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் ரஜினி ஒரு தலைவராக வந்திருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்திருக்க வேண்டும். இதுதான் அவரிடம் நான் எதிர்பார்த்தது. அது மட்டுமில்லாமல் நடித்தால் மட்டும் ரசிகர்களை குஷிப்படுத்தி விட முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்ன? அதை தலைவராக அரசியலில் அதை அவர் காட்டியிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: 25வது படம்னா சும்மாவா? வெங்கட்பிரபுவை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்! அவருடைய டார்கெட்டே இவர்தானாம்
இப்போது அவரை பார்க்கும்போது அதுவும் படங்களில் சிகரெட்டை தூக்கி போடுவது. சண்டை மாதிரியான காட்சிகளில் பார்க்கும் பொழுது அதே மாதிரியான கண்ணோட்டத்தில் தான் அவரை நிஜத்திலும் பார்க்கக்கூடிய மனநிலையில் நான் இருக்கிறேன். எனக்கு அது வேண்டாம் .நல்ல தலைவராக அரசியலுக்கு அவர் வந்திருக்க வேண்டும்.
அதை செய்ய தவறிவிட்டார் ரஜினி என தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார் பிரவீன் காந்தி. ஏற்கனவே அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என கிட்டத்தட்ட பல வருடங்களாக ரசிகர்களை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த். அவரை பின்தொடர்ந்த ரசிகர்களும் தொண்டர்களும் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இதையும் படிங்க: 25வது படம்னா சும்மாவா? வெங்கட்பிரபுவை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்! அவருடைய டார்கெட்டே இவர்தானாம்
ஆனால் திடீரென ஒரு அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் தலைகீழாக மாற்றியது. நான் அரசியலுக்கு வரவில்லை என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு அத்தனை பேரையும் ஏமாற்றினார். அதிலிருந்து அவர் மீது இருந்த நம்பிக்கை போனது. இந்த ஒரு மனோ நிலையில் தான் பிரவீன் காந்தி இப்படியான சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.