இத வச்சிதான் அஜித்தை அடிக்கணும்!. வெறிகொண்டு வேலை பாக்கும் வெங்கட்பிரபு!.. இதுதான் விஷயம்!..

Published on: July 1, 2024
venkat
---Advertisement---

சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் வெங்கட்பிரபு. இவர் கங்கை அமரனின் மகன். சினிமா மற்றும் கிரிக்கெட் என இரண்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அதனால்தான் இவர் இயக்கிய முதல் படத்திலேயே கதை கிரிக்கெட்டை சுற்றி நடப்பதாக எழுதியிருந்தார்.

அப்படம் ஹிட் அடித்ததால் சரோஜா, கோவா, மங்காத்தா என தொடர்ந்து திரைப்படங்களை இயக்கினார். இதில், மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அஜித்துக்கும் இப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம்தான் அஜித்துக்கு அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது.

mankaatha

இந்த படத்தில் எல்லா வேடங்களையுமே நெகட்டிவாக அமைத்திருந்தார் வெங்கட்பிரபு. ஆனாலும் படம் சூப்பர் ஹிட். இந்த படம் அஜித்துக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்தது. ஆனால், அதேநேரம் அதன்பின் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவே இல்லை. அஜித் வெங்கட்பிரபு இருவருக்கும் இடையேயான உறவு ஜீ படத்தில் நடித்ததில் இருந்தே இருக்கிறது.

இந்த படத்தில் அஜித்தின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார் வெங்கட்பிரபு. இருவரும் அண்ணன் – தம்பி போல பழகினார்கள். அந்த பழக்கத்தின் அடிப்படையில்தான் மங்காத்தா படத்தில் நடித்தார் அஜித். அதன்பின் அஜித் – விஜய் என இருவரையும் வைத்து ஒரு படத்தி எடுக்க முயற்சிகள் எடுத்தார் வெங்கட்பிரபு.

ajith vijay

இருவரையும் சந்தித்து இதுபற்றி பேசி புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ‘இப்போது இந்த போட்டோவை வெளியிட வேண்டாம்’ என அஜித் சொன்னார். ஆனால், வெங்கட்பிரபு அதை கேட்காமல் உடனே சமூகவலைத்தளங்களில் அந்த புகைப்படத்தை வெளியிட்டார். அதோடு, விஜயும், அஜித்தும் இணைந்து நடிக்கும் படத்தை என் மகன் விரைவில் இயக்கவிருக்கிறான் என கங்கை அமரன் பேட்டி கொடுத்தார். இது எல்லாம் அஜித்துக்கு கோபத்தை ஏற்படுத்தவே வெங்கட்பிரபுவை ஒதுக்க துவங்கினார். அவர் சொன்னதை கேட்கவில்லை எனில் அஜித்தின் கோபம் இப்படித்தான் இருக்கும்.

அதன்பின் பலமுறை வெங்கட்பிரபு முயற்சி எடுத்தும் அஜித் அவரை சந்திக்கவே இல்லை. இது வெங்கட்பிரபுவின் ஈகோவையும் தொட்டுவிட்டது. எனவே, விஜயை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். அஜித்தின் போட்டியாளர் விஜய் என்பதால் இந்த படத்தை ஒரு வெற்றிப்படமாக கொடுத்து அஜித்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என வெங்கட்பிரபு நினைக்கிறார் என சொல்லப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.