படுக்கையில் ஷாலினி!. கையை பிடித்தபடி அஜித்!.. செம ரொமான்ஸ் போங்க!.. வைரல் பிக்!…

Published on: July 3, 2024
---Advertisement---

நடிகர் அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அப்படத்தில் நடித்த ஷாலினியை காதலித்தார். அவரையே திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டார். ஆனால், அஜித்தின் காதலை ஏற்றுக்கொள்ள முதலில் ஷாலினி தயங்கினார். ஆனால், அவரை அறியாமலே அஜித்தின் மீது அவருக்கும் காதல் பிறந்தது. அஜித்துக்கு சம்மதம் சொன்னார்.

இருவருக்கும் திருமணம் நடந்தது. உருகி காதலித்த ஷாலினிக்கு அன்பான கணவனராக இருந்து வருகிறார் அஜித். இந்த ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் என அழகான குடும்பம். சினிமாவில் பிசியான நடிகராக இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் அஜித்.

Ajith, Shalini
Ajith, Shalini

ஷூட்டிங் இல்லையெனில் வீட்டில் மட்டுமே இருப்பார். அஜித்துக்கு சமைக்க தெரியும் என்பதால் அவர் வீட்டில் இருந்தால் அதிகாலை சீக்கிரம் எழுந்து குழந்தைகளுக்கு பிடித்ததை சமைத்து வைத்திருப்பாராம். சினிமாவை எக்காரணம் கொண்டும் வீட்டிற்கு எடுத்து செல்லமாட்டார். சினிமா என்பது அவருக்கு தொழில் மட்டுமே.

இப்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு துவங்கிய இப்படத்தின் இழுத்து கொண்டே போனது. ஒருவழியாக படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில்தான், அஜித் படப்பிடிப்புக்காக அசர்பைசான் நாட்டில் இருந்தபோது நேற்று முன்தினம் ஷாலினிக்கு சென்னையில் அறுவை சிகிச்சை நடந்தது.

ஆனாலும், இதற்காக சென்னை வந்தால் படப்பிடிப்பு தடைபடும் என நினைத்த அஜித் அங்கேயே இருந்துகொண்டு மனைவி ஷாலினி உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால், மனைவி ஷாலினியை பார்ப்பதற்காக அஜித் விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்தார்.

ajith

இந்நிலையில், மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் ஷாலினியின் கையை பிடித்தபடி அஜித் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஷாலினியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘உன்னை எப்போதும் நேசிக்கிறேன்’ என கேப்ஷன் கொடுத்து உருகி இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.