Connect with us

Cinema News

சும்மா ஒண்ணும் நடிகர்கள் அம்பானி மகன் திருமணத்தில் ஆடல!.. இத்தனை கோடிக்கு கிஃப்ட் வந்துருக்கே!..

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் மும்பையில் உள்ள ஜியோ சென்டரில் கடந்த 2 நாட்களாக களைகட்டி வருகின்றன. அதில், கலந்து கொண்ட நடிகர்கள் ஆட்டம் போடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

ரஜினிகாந்த், ஷாருக்கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அட்லீ, சூர்யா, ராம் சரண், மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் அம்பானி மகன் திருமண விழாவில் ஆட்டம் போட்ட வீடியோக்கள் வெளியாகின. நடிகர்களை தாண்டி பாலிவுட்டின் ஒட்டுமொத்த நடிகைகளும் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

கோலிவுட்டில் இருந்து சூர்யா, ஜோதிகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். திருமணத்தில் பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், அதில், குறிப்பாக சிலர் ஆனந்த் அம்பானியின் மாப்பிள்ளை தோழர்களாகவே மாறியிருந்தனர்.

ஷாருக்கான், ரன்வீர் சிங், அட்லீ உள்ளிட்ட பலர் அந்த அணியில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களில் மாப்பிள்ளை தோழர்களாக வந்தவர்களுக்கு 2 கோடி மதிப்பிலான ஆடிமஸ் பிகட் வாட்ச்களை பரிசாக அம்பானி வழங்கியுள்ளார்.

திருமண நிகழ்வில் அந்த கை கடிகாரத்தை கைகளில் கட்டிக் கொண்டு ஷாருக்கான், ரன்வீர் சிங், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் போஸ் கொடுத்த வீடியோ காட்சியே வைரலாகி வருகின்றன. திருமணத்தில் கலந்து கொண்ட அத்தனை பிரபலங்களுக்கும் லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 5000 கோடி வரை திருமண செலவு ஆனதாக கூறுகின்றனர்.

மாப்பிள்ளை ஆனந்த் அம்பானி அணிந்த திருமண உடை மட்டுமே 217 கோடி ரூபாய் என்கின்றனர். அவர் காலில் அணிந்திருந்த செருப்பின் விலை 50 கோடி என்றும் ஏகப்பட்ட தகவல்கள் பாலிவுட்டில் உலா வருகின்றன. இதையெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்றாலும் அம்பானியாச்சே ஒருவேளை இருக்கும் என்று தான் போக வேண்டும்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C9XqhortOom/

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top