Connect with us

Cinema News

இதை பெருமைனு சொல்றதா? பந்தானு சொல்றதா? எந்த நடிகரிடமும் இல்லாத ஒன்னு.. கெத்து காட்டும் விக்ரம்

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமுக்கு என ஒரு தனி கிரேஸ் இருந்து வருகிறது. ரஜினி கமல் விஜய் அஜித் என அவர்கள் ஒரு இடத்தை நோக்கி பயணப்பட்டாலும் நடிகர் விக்ரம் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரை பின்பற்றி ஏராளமான ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள். படங்களில் இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது .கமலுக்கு அடுத்தபடியாக தனது கெட்டப்பை விதவிதமாக மாற்றி அமைத்து நடிக்கக்கூடிய ஒரு தன்னிகரற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார் விக்ரம்.

படத்தில் பார்ப்பதற்கும் நேரில் இவரை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. படத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார். ஆனால் நேரில் ரசிகர்களுடன் ரசிகராக இணைந்து அவர்களுடன் எளிதில் ஜெல் ஆகக் கூடிய ஒரு ஜாலியான நபர்தான் விக்ரம். இவருடைய ஸ்டைலுக்கு என ஒரு தனி மாஸ் இருந்து வருகிறது .

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் எந்த நடிகர்களும் செய்யாத ஒரு விஷயத்தை விக்ரம் செய்திருக்கிறார். அதாவது சினிமாவை பொறுத்த வரைக்கும் கேரவன் என்ற ஒரு கல்ச்சர் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் கேரவன் என்ற ஒரு வசதியே கிடையாது.

சூட்டிங் முடித்துவிட்டு ஒட்டுமொத்த நடிகர் நடிகைகளும் ஒரு மரத்தின் அடியிலோ அல்லது ஓரமாகவோ நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு ஜாலியாக அரட்டை அடித்த காலம் உண்டு. ஆனால் இப்போது இந்த கேரவன் வசதி வந்த பிறகு தன்னுடைய ஷாட் முடிந்ததும் கேரவனுக்குள் சென்று விடுகின்றனர். இதனால் ஒருவருக்கொருவர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் விக்ரம் மட்டுமே சொந்தமாக கேரவனை வைத்திருக்கிறாராம் .அந்த கேரவனின் மதிப்பு கிட்டத்தட்ட மூன்றை கோடி என சொல்லப்படுகிறது. வேறு எந்த நடிகர்களுமே சொந்தமாக கேரவன் வைக்கவில்லையாம். இதற்கு முன்பாக சத்யராஜ் மட்டுமே டெம்போ ட்ராவலரில் ஒரு கேரவன் வசதி அமைத்து அதை பயன்படுத்திக் கொண்டு இருந்தாராம்.

அவருக்கு பிறகு இப்போது விக்ரம் தான் சொந்தமாக கேரவனை பயன்படுத்தி வருகிறார் என கேரவன் அருணாச்சலம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற சினிமாக்களில் அனைத்து நடிகர்களும் சொந்தமாக கேரவனை பயன்படுத்தி வருகிறார்கள். தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் எனக்கு தெரிந்து விக்ரம் மட்டுமே சொந்தமாக கேரவன் வைத்திருக்கிறார் என கேரவன் அருணாச்சலம் கூறியிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top