நகைச்சுவையில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் பிஜிலி ரமேஷ். இப்போது திடீரென சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறார். பிளாக் ஷீப் என்ற நிறுவனம் ஒரு பிராங்க் ஷோ நடத்தினார்கள். அதன் மூலம் பிரபலமானவர்தான் இந்த பிஜிலி ரமேஷ்.
அந்த ஷோவில் இவர் பேசிய விதம் சரக்கு போட்டு அடித்த லூட்டி இதெல்லாம் பயங்கரமாக ட்ரெண்டாகி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் பிஜிலி ரமேஷ். அதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவர் குடிக்கு அடிமையானார். திரைப்படங்களில் நடிக்க தொடங்கியதில் இருந்து நாள்தோறும் குடித்துக்கொண்டேதான் இருப்பாராம்.
அதன் விளைவு இன்று அவருடைய உடல் வீங்கி, வயிறு எல்லாம் வீங்கி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவருடைய மனைவி பேட்டியில் கூறி வருகிறார். அதோடு பிஜிலி ரமேஷும் எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என கேட்டு வருகிறார். அதோடு ரஜினியிடமும் உதவி கேட்டு வருகிறார்.
இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் போது ‘ நீ என்ன சொன்னாலும் கேட்காமல் குடிப்ப? அதுக்கு ரஜினி உதவி செய்யணுமா?’ எனக் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரஜினி இரவு பகலாக உழைத்து சேர்த்து வைத்த காசை அவர் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் சேர்த்து வைப்பாரா? அதை விட்டு இப்படி தானதர்மம் செய்வாரா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் சமீபத்தில் ரஜினி அம்பானி வீட்டு திருமணத்தில் போட்ட ஆட்டமும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்க்கிறது. அங்கு ஆடிய டான்ஸுக்கு பின்னாடி பணம்தான் புரளுகிறது என்ற ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது. ரஜினிக்கு ஒரு பெரும் தொகை கொடுத்தே அம்பானி இங்கே அவரை வரவழைத்திருக்கிறார் என்றும் அதற்காகவே அவர் டான்ஸ் ஆடியிருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
