ஃபேஷன் எந்தளவு வாழ்க்கையை சீரழிக்குது பாருங்க! கண் பார்வையை இழந்த சிம்பு பட நடிகை.. இவங்களா?

Published on: July 22, 2024
simbu (2)
---Advertisement---

பொது வாழ்க்கையில் நுழைந்துவிட்டால் தான் செய்யும் எந்தவொரு செயலானாலும் அது மற்றவர்களை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். சினிமா பிரபலங்களை எடுத்துக் கொண்டால் டிரெண்டிங்கிற்காக அவர்கள் சில செயல்களை செய்வது ரசிகர்களைத்தான் பெரிதும் பாதிக்கும் .ஏனெனில் ரசிகர்கள் அவர்களை தங்கள் ரோல் மாடலாகவே பின்பற்றி வருகிறார்கள்.

அந்தளவுக்கு தனக்கு பிடித்த நடிகர் நடிகைகள் மீது பெரும் ஈடுபாடு கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் தன்னை பின்பற்றும் ரசிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இதில் நாம் பார்க்க போகும் நடிகையை எடுத்துக் கொண்டால் விளையாட்டாக செய்யப் போய் அது விபரீதமானதுதான் மிச்சம்.

சிம்பு மற்றும் அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வானம். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை ஜாஸ்மின். தமிழில் இந்த ஒரு படத்தில் மட்டும்தான் நடித்திருந்தார். அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து கரோர்பதி என்ற படத்தில் நடித்திருந்தார்.

மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த ஜாஸ்மின் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் இவருக்குத்தான் தற்போது கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. அதாவது நடிகைகளை பொறுத்தவரைக்கும் படங்களில் நடிக்கும் போது கண்களில் லென்ஸ் அணிந்து கொண்டு நடிப்பார்கள்.

jasmine
jasmine

அதே போல்தான் ஜாஸ்மினும் தொடர்ந்து லென்ஸ் அணிவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாராம். இதனால் அவருடைய கருவிழி பாதிக்கப்பட்டு பார்வைத்திறன் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்காக இப்போது மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.