latest news
தளபதியில் மம்முட்டி ரோலில் முதலில் நடிக்க இருந்தது இவரா? நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டாரே…!
ரஜினி படத்தில் நடிக்க கொடுத்து வச்சிருக்கணும். இப்படி மிஸ் பண்ணிட்டாரே ஜெயராம்…!
Published on
ரஜினி படத்தில் நடிக்க கொடுத்து வச்சிருக்கணும். இப்படி மிஸ் பண்ணிட்டாரே ஜெயராம்…!
1990ல் மணிரத்னம் இயக்கத்தில் தமிழக சூப்பர்ஸ்டாரும், கேரள சூப்பர்ஸ்டாரும் இணைந்து நடித்த படம் தளபதி. இந்தப் படம் நட்புக்கு இலக்கணமாக இருக்கும். மலையாளத்தில் இருந்து வரும் நடிகர்கள் தமிழ்ப்படங்களில் நடிக்கத் தயங்குவார்களாம்.
ஆனால் மம்முட்டி ரஜினி, மணிரத்னம் படம் என்றதும் ஒப்புக்கொண்டாராம். இந்தப் படம் அவருக்கு மலையாளத்திலும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்ததாம். முதல் அதிகாலை 4 மணி ஓபனிங் ஷோவை அறிமுகப்படுத்தினதே இந்தப் படம் தானாம்.
அப்போது நல்ல படம் என்றாலே 35 தியேட்டர்களுக்கு மேல் கிடைக்காதாம். ஆனால் இந்தப் படத்திற்கு நல்ல ஓபனிங் இருந்ததால 50 தியேட்டர்களில் ரிலீஸானதாம். மகாபாரதத்தில் வரும் கர்ணன், துரியோதனன் நட்பைப் பற்றிப் பேசுகிறது.
‘என் நண்பன் போட்ட சோறு, நிதமும் தின்னு பாரு, நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்’ என்ற இந்தப் படத்தின் பாடல் வரிகளை இன்றும் பலர் வாட்சப்பில் ஸ்டேட்டஸாக வைத்திருப்பார்கள். நாட்டியப் பேரொளி நடிகை பத்மினியின் சொந்தத் தம்பி பொண்ணு தான் நடிகை ஷோபனா.
ரஜினியைக் காதலித்து விட்டு அரவிந்தசாமியைக் கல்யாணம் பண்றேன்னு சொல்ற சீன்ல அவங்க கண்ணுல நீர் குளம் மாதிரி இருக்கும். இந்தப் படத்துல நடிக்கும்போது அவருக்கு 20 வயசு தானாம்.
அப்போ இவர் ரொம்ப பிசியான நடிகை. அதனால 2 மாதமாக வீட்டுக்குப் போகாம நடிச்சிக்கிட்டே இருந்தாங்களாம். படம் நடிக்கும்போதே வீட்டுக்குப் போயி ரொம்ப நாளா ஆனதால வீட்டுக்குப் போகணும்…னு அடிக்கடி மணிரத்னத்துக்கிட்ட சொல்லிக்கிட்டு அழுவாங்களாம்.
அவரும் ஒவ்வொரு டைமும் டிக்கெட்டைப் புக் பண்ணிக்கிட்டு வீட்டுக்குப் போக பர்மிஷன் கேட்பாராம். ஆனா சீன் நல்லா வரணும்கறதுக்காக ஒவ்வொரு சீனும் 30 டேக், 40 டேக் வாங்குமாம். நான் திரை மறைவில் அழுதுக்கிட்டே நடிச்ச படம்னா தளபதியைத் தான் சொல்வேன் என்றாராம்.
ரஜினிக்கும், மம்முட்டிக்கும் படத்தில அவ்வளவா மேக்கப் கிடையாதாம். ரஜினி தான் கறுப்பா இருப்பதால தனக்கு டைட்டான பேண்ட், ஷர்ட் தான் வேணும்னு கேட்டாராம். ஆனா அவருக்கு அப்படி கிடைக்கலையாம்.
‘தன்னோட நடிக்கிற மம்முட்டி ஆப்பிள் மாதிரி கலரா இருப்பாரே… தானும் நல்லா இருக்கணும்னா அப்படி டைட்டா ஷர்ட் போட்டா தான் நல்லாருக்கும்’னு நினைச்ச ரஜினிக்கு அப்படி எதுவும் கொடுக்கப்படலையாம். இந்தப் படத்தில் மம்முட்டி ரோலில் முதலில் நடிக்க இருந்தவர் ஜெயராம் தானாம். ஆனால் அவரால நடிக்க முடியாததால மறுபடியும் மம்முட்டியே நடித்தாராம்.
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Kantara 2: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 3 வருடங்களுக்கு முன்பு வெளியான கந்தாரா திரைப்படம் 18 கோடி பட்ஜெட்டில் உருவாகி...