வனிதா மகனுக்காக ஓடி வந்து உதவி செய்த ரஜினி! ஆச்சரியத்தை வரவழைக்கும் தலைவரின் பெருந்தன்மை

Published on: August 8, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திர குடும்பமாக ஜொலிப்பது குணச்சித்திர நடிகரான விஜயகுமாரின் குடும்பம்தான். விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள்.இதில் நடிகை மஞ்சுளாவின் வாரிசுகளில் மூத்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆகாஷை பொறுத்தவரைக்கும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் கருத்து வேறு பாடு காரணமாக 2007 ஆம் ஆண்டுதான் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது. ஆனால் இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற ஒரு மகன் இருக்கிறார். விவாகரத்து, குடும்பத்துடன் இருக்கும் பிரச்சினை காரணமாக மகன் ஸ்ரீஹரியை பிரிந்து வாழ்கிறார் வனிதா. அதனால் ஸ்ரீஹரி இப்போது அப்பாவின் அரவணைப்பிலும் தாத்தா விஜயகுமார் கண்காணிப்பிலும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஸ்ரீஹரி நடிக்க இருக்கிறார். சினிமா பற்றிய படிப்பை லண்டனில் முடித்த ஸ்ரீஹரி அடுத்ததாக நடிக்கலாமா? இயக்கலாமா? தயாரிக்கலாமா என்ற யோசனையில் இருந்தாராம். விஜயகுமாரை பொறுத்தவரைக்கும் இக்கட்டான நிலையில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என நினைத்தால் ரஜினியிடம்தான் ஆலோசனை கேட்பாராம்.

அதனால் தன் பேரன் விஷயத்திலும் என்ன பண்ணலாம் என கேட்டிருக்கிறார். ரஜினியும் ஸ்ரீஹரியை அழைத்து அவரது ஆசையை கேட்டிருக்கிறார். அதன் பின் மகனுக்காக பிரபுசாலமனிடம் ஏற்கனவே ஆகாஷ் பேசியதாகவும் அவரிடம் ஒரு கதை இருப்பதாகவும் விஜயகுமார் ரஜினியிடம் தெரிவித்திருக்கிறார்.

இதை கேட்டதும் ரஜினி ‘பிரபுசாலமனா? ஓ சூப்பர் சூப்பர். பெரிசா பண்ணுங்க. கதை என்ன ’ என கேட்டாராம். விஜயகுமாருக்கு கதை பற்றி தெரியாததால் பிரபுசாலமனை கதை சொல்ல சொல்லியிருக்கிறார் ரஜினி. அதன் பிறகு போனிலேயே பிரபுசாலமன் ரஜினிக்கு கதை சொல்ல கதையை கேட்டதும் ரஜினி ‘வேற லெவலா இருக்கு கதை. ஒரு சிங்கம். ஒரு ஹீரோ. கேட்கவே மாஸா இருக்கு. தைரியமா பண்ணுங்க’ என கூறினாராம்.

இதை பற்றி பேசிய விஜயகுமார் ரஜினியே சொல்லிட்டார். அப்புறம் என்ன? அடுத்ததாக தயாரிப்பாளர் யாரை போடலானு நினைக்கும் போது ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் நியாபகத்திற்கு வந்தார். இப்படியாக படம் தொடங்கியது என விஜயகுமார் கூறினார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment