கிண்டலடித்தவர்களை செமையா சம்பவம் செய்த அஜித்… இந்த மேட்டருக்கு இவ்வளவு இறங்கி செஞ்சிருக்கரே?

Published on: August 8, 2024
---Advertisement---

நடிகர் அஜித், தனது சினிமா கரியரின் ஆரம்பகாலங்களில் குரலுக்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். வான்மதி படத்தில்கூட அவரின் உச்சரிப்பு சரியில்லை என்று டப்பிங் பேச எதிர்ப்பு எழுந்தது.

அப்போது உடன் நடித்த வடிவுக்கரசி அஜித்துக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். அஜித்தின் குரலை மிமிக்ரி செய்து, `ஹேய்… அது…’ என்று கேலி செய்வதும் நீண்ட நாட்களாகத் தொடர்ந்தது.

இதை சரிசெய்ய அஜித் புத்திசாலித்தனமாக சில விஷயங்களைச் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். முதலில் தமிழ் மொழியை முழுமையாக் கற்றுக்கொண்டதோடு உச்சரிப்பின் நெளிவு சுழிவுகளையும் முழுமையாகத் தெரிந்துகொண்டார்.

அதன்பின்னர், உதவி இயக்குநர்கள் தமிழிலேயே வசன பேப்பர்களைக் கொடுத்தாலும் அதை சரியாக உள்வாங்கிக்கொண்டு பேசுவதை வாடிக்கையாக்கினார். இன்னொருபுறம் தனது வசனங்களை குரல் அடர்த்தியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் டப் பண்ணுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

இதற்காக அதிகாலை இரண்டு மணிக்கு மேல் வீட்டிலிருந்து கிளம்பி ஸ்டூடியோக்களுக்கு வந்து காலை 8 மணிக்குள் டப்பிங்கை முடித்து விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த நேரத்தில் அடர்த்தியாக இருக்கும் குரல் வழியே அவர் பேசிய வசனங்கள் தியேட்டரில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.

இது வீரம் படத்திலிருந்து தொடர்கிறது. அஜித்தின் குரலில் இருக்கும் இந்த மாற்றம் பற்றி விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மணிகண்டன் மிமிக்ரி செய்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment