தக் லைப்பில் செய்த தரமான சம்பவம்!. இப்படி மாறிட்டாரே சிம்பு!.. வாயை பிளக்கும் திரையுலகம்!…

Published on: August 10, 2024
simbu
---Advertisement---

Simbu: அப்பா டி.ராஜேந்தரால் சிறு வயதிலேயே சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் சிம்பு. சிறு வயதிலேயே அப்பாவை போல பன்ச் வசனங்களை பேசி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நன்றாக நடனமும் ஆடுவார். காதல் அழிவதில்லை என்கிற படத்தில் மீசை முளைத்த இளைஞனாக ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். சிறு வயதிலிருந்து அப்பா சொல்லும் ஸ்டைலில் நடித்த சிம்பு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மாற்றிக்கொண்டார். பெரும்பாலும் காதல் கதைகளிலேயே நடித்தார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டினார்.

நிறைய பில்டப் செய்வார். விரலில் பல வித்தைகளை காட்டுவார். இதை பத்திரிக்கைகள் நக்கலடித்ததால் ஒரு கட்டத்தில் அதை விட்டுவிட்டு இயல்பாக நடிக்க துவங்கினார். கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தின் வெற்றி மீண்டும் சிம்புவை பிஸி ஆக்கியது.

அதேநேரம், இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து ஏழரையை இழுக்கும் பழக்கம் சிம்புவுக்கு இருக்கிறது. இதனால் ஒரு படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு சண்டை போட்டுவிட்டு போய்விடுவார். அதன்பின் சமாதானம் செய்து அழைத்து வருவார்கள். கொஞ்சநாள் நடித்துவிட்டு மீண்டும் சண்டை போட்டு போய்விடுவார். இது பல படங்களில் நடித்திருக்கிறது.

மாநாடு படத்திலேயே அதுதான் நடந்தது. ஆனால், அந்த படத்தின் வெற்றி சிம்புவை கொஞ்சம் மாற்றியது. உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி அவர் அப்படத்தில் நடித்தது திரையுலகினருக்கே ஆச்சர்யத்தை கொடுத்தது. இப்போது கமல் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிக்க துவங்கியது முதல் இப்போது வரை எந்த பிரச்சனையையும் சிம்பு செய்யவில்லை. அதற்கு காரணம் மணிரத்னம் மற்றும் கமல் என எல்லோருக்கும் தெரியும். இன்னும் சில நாட்களில் சிம்பு நடிக்கும் காட்சிகள் முடிவடையவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் நம்ம சிம்புவா இது? என வாயை பிளக்கிறது திரையுலகம்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.