Cinema History
சில்க் ஸ்மிதாவிற்கு கெட்ட வார்த்தை சொல்லி கொடுத்த கமல்ஹாசன்… சீ!..
Kamalhassan: சகலகலா வல்லவன் படம் நடிகர் கமலின் சினிமா பயணத்தில் முக்கியமானதொரு மைல்கல் படம் என்றே சொல்லலாம். காரணம் அதுவரை ஏ சென்டர் நடிகராக இருந்த அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்த படம்.
ஏவிஎம் தயாரிப்பு, எஸ்.பி.முத்துராமன் இயக்கம், பஞ்சு அருணாச்சலத்தின் திரைக்கதை – வசனம் என அந்தகாலத்தில் வெள்ளித்திரையில் கோலோச்சிய கூட்டணி. கூடவே இளையராஜாவும் கமலும்… கேட்கவா வேண்டும். படம் பற்றிய அறிவிப்பு வெளியானபோதே படம் நிச்சயம் சூப்பர் ஹிட்தான் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதையும் படிங்க: தங்கலானை தூக்கி சாப்பிட்ட டிமான்டி காலனி 2.. இனிமே பேசுவீங்க பிரியா பவானிசங்கர்.. படம் எப்படி இருக்கு?
1982 ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகி தமிழ்நாடு முழுவதும் வசூலை வாரிக்குவித்தது. தியேட்டர்களில் படம் பார்த்தவர்களை விட டிக்கெட் கிடைக்காமல் திரும்பப் போனவர்கள்தான் அதிகம் என அப்போது பத்திரிகைகள் பரபரப்பாக எழுதின. சகலகலா வல்லவன் படத்தின் கமல் – அம்பிகா ஜோடியும் பரபரப்பாக பேசப்பட்ட ஜோடி.
படத்தின் பூஜையில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த இளமை இதோ இதோ பாடல் புத்தாண்டு கொண்டாட்டங்களில் இன்றளவும் இடம்பெறும் சாகாவரம் பெற்ற பாடலாக மாறி நிற்கிறது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு இருக்கும் பாப்புலாரிட்டியைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், பின்னாட்களில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் கமல் போல வேடமிட்டு ரஜினி நடித்திருப்பதைச் சொல்லலாம்.
இதையும் படிங்க: இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்!.. கையெடுத்து கும்பிட்ட வெங்கட்பிரபு!.. பாவம் விட்ருங்கப்பா!…
இதுதான் சமயம் என சில கெட்ட வார்த்தைகளைச் சொல்லிக்கொடுக்கவே, சில்க்கும் சென்று கேஷியரிடம் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு கேஷியர் அழாத குறைதான். அதன்பிறகு, நடந்த விஷயங்களைச் சொல்லி கமலும் ஒய்.ஜி.மகேந்திரன் இருவரையும் சகஜநிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.