நல்ல கதையை ஓவர் ஆசையில் கெடுத்தது அந்த ஹீரோதான்… வெங்கட் பிரபு கொடுத்த ஷாக்…

Published on: September 2, 2024
---Advertisement---

Venkat Prabhu: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடன் பணியாற்றி இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் ஒருவர் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முதலில் நடிகராக எண்ட்ரி கொடுத்தவர் வெங்கட் பிரபு. ஆனால் அது அவருக்கு சரியாக அமையவில்லை. இதை தொடர்ந்து  அறிமுக நாயகர்களை கொண்டு சென்னை 28 படத்தை இயக்கினார். முதல் படமே அவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதையும் படிங்க: முதல் நாளே விஜய் என்கிட்ட ஸ்டிரிக்டா சொன்னது! ‘கோட்’ பட தயாரிப்பாளர் சொன்ன விஷயம்

 இதனால் தன்னுடைய ரூட்டையும் கோலிவுட்டில் மாற்றிக்கொண்டார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த வெங்கட் பிரபுவிற்கு நடிகர் அஜித்தின் 50-வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் பல வருடங்களுக்கு பின்னர் அஜித் ஆன்ட்டி ஹீரோ வேடம் ஏற்றார்.

கிட்டத்தட்ட கோபமான முகத்துடனே நடித்து வந்த அஜித்தின் ஜாலியான கேரக்டரை அப்பாடத்தில் கொடுத்திருப்பார். இதை தொடர்ந்து, சூர்யாவை வைத்து மாஸ் படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் சூர்யாவிற்கு பெரிய அளவில் ஹிட் படமாக அமையவில்லை.

இதையும் படிங்க: கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் என்ன தெரியுமா? ஒரு வெறியோடதான் இருக்காரு

இதை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரிய அளவில் பாராட்டுகளையும் பெறவில்லை. இந்நிலையில் சிம்புவின் கம்பேக் படமாக அமைந்தது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம். அதிலும் தமிழ் சினிமாவுக்கே புதிய கதையான லுப் என்னும்  கான்செப்டில் கதை சொல்லி வெற்றியும் பெற்றார்.

masss

இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, மாஸ் திரைப்படத்தில் நான் முதலில் பேய் வைத்து மட்டுமே கதையை உருவாக்கி இருந்தேன். ஆனால் சூர்யா தரப்பு தான் அதில் ஆக்சன், சண்டைக்காட்சிகள் வேணும் என கதையின் போக்கையே மாற்றினர்.

ஆனால் அதை தொடர்ந்து நான் இயக்கிய மங்காத்தா, மாநாடு, தற்போது வெளிவரும் கோட்  திரைப்படத்தில் என்னுடைய கதையாக மட்டுமே அது அமைந்தது. நடிகர்கள் தரப்பு அல்லது தயாரிப்பு குழு தரப்போ எந்தவித மாற்றத்தையும் செய்யக்கோரி என்னை வலியுறுத்தவில்லை. முழுக்க முழுக்க என் கதையாக மட்டுமே இப்படங்கள் உருவானது என குறிப்பிட்டு இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.