Connect with us
simran

Cinema News

புது அவதாரம் எடுத்த சிம்ரன்! இனிமே அடுத்தடுத்து ஜாக்பாட் தான் போல

Simran: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். லவ் டுடே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிம்ரன் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில் தமிழே தெரியாமல் இந்த சினிமாவிற்குள் வந்தார்.

சினிமாவில் நுழைவதற்கு முன் ஆர்ஜேவாக ஹிந்தியில் பல சேனல்களில் பணியாற்றிய சிம்ரன் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி அதன்மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இருக்கிறார். ஹிந்தியலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் சிம்ரன்.

இதையும் படிங்க:கோட்டில் சிவகார்த்திகேயனுக்கு அந்த டயலாக்கை போட்டதே விஜய்தானாம்… பக்கா ஸ்கெட்ச்தான்!

இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அவரை வாரி அனைத்துக் கொண்டார்கள் என்று சொல்லலாம். ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களிலும் குடிபெயர்ந்தார் சிம்ரன்.  கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் முன்னணி ஹீரோயின் ஆக கொடி கட்டி பறந்தார் சிம்ரன்.

அவர் இருக்கும் காலத்தில் யாருமே ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பாலும் நடனத்தாலும் அழகாலும் இந்த தமிழ் சினிமாவை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார்.

இதையும் படிங்க:கோட் படத்தோட வெற்றி ரகசியம் இதுதானாம்… அப்படி என்னப்பா இருக்கு படத்துல?

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய சிம்ரன் குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்து வந்தார். இன்று பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட பிரசாந்த் நடித்த அந்தகன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார்.

simran1

simran1

இந்த நிலையில் நடிகையாகவே இந்த சினிமாவில் வலம் வந்த சிம்ரன் லாஸ்ட் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். அவர் கணவர் தீபக்குடன் இணைந்து இந்த திரைப்படத்தை சிம்ரன் தயாரிக்கிறார். இதில் அவர் லீடு ரோலில் நடிக்கவும் செய்கிறார். இந்த படத்தை லோகேஷ் குமார் என்பவர் இயக்குகிறார்.

இதையும் படிங்க:குட்டகவுனில் தொடையை காட்டி பெட்ரூமில் கிளுகிளுப்பு காட்டும் விஜே பார்வதி!.. வீடியோ

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top