தளபதி 69-ல் மாஸ்டர் படத்தின் பிரபலம்!.. தட்டி தூக்கிய ஹெச்.வினோத்!.. பக்கா பிளான்!…

Published on: September 10, 2024
vinoth
---Advertisement---

Thalapathy 69: விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் முடிந்து இப்போது ரிலீஸும் ஆகிவிட்டது. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தியேட்டரில் நல்ல வசூலை பெற்று வருகிறது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா,மோகன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டதாலும், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே அவர் நடிப்பார் என நம்பப்படுவதாலும் கோட் படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். படத்தின் நீளம் 3 மணி நேரமாக இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு படம் பிடித்திருக்கிறது.

இதையும் படிங்க: மங்காத்தா படத்தில் அஜித் இல்லை!.. அது நான் பண்ன வேண்டிய படம்!.. புலம்பும் நடிகர்!…

அடுத்து விஜய் நடிக்கப்போவது அவரின் 69வது திரைப்படமாகும். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். பார்த்திபனின் உதவியாளரான வினோத் சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அடிப்படையில் பத்திரிக்கையாளராக இருந்ததால் ஒரு விஷயத்தை நன்றாக ஆராய்ந்து அதை படமாக எடுப்பது ஹெச்.வினோத்தின் வழக்கம்.

அது அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்தாலே புரியும். அதன்பின் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கினார். இப்போது விஜய் படத்தை இயக்கவுள்ளார். பெரிய இயக்குனர் மற்றும் நடிகரின் படத்தில் ஒளிப்பதிவு மிகவும் முக்கியம். எனவே, அதில் சிறந்தவர்களையே தேர்ந்தெடுப்பார்கள்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா உனக்கு வேண்டாம்னு தனுஷ்கிட்ட சொன்னேன்!.. இப்படி உடைச்சிட்டாரே சுசித்ரா!..

அந்தவகையில், தளபதி 69 படத்துக்கு ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளரன சத்யன் சூர்யன் ஏற்கான்வே ஹெச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லோகேஷ் இயக்கிய கைதி, மாஸ்டர் படங்களுக்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர்.

இப்படி, விஜய், ஹெச்.வினோத் என இருவருக்குமே அவர் பழக்கம் என்பதால் அவரை இந்த படத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாட்டிக்கினாரு ஒருத்தரு.. ‘மனசிலாயோ’ அச்சு அசல் இந்தப் பாடலின் காப்பி! சரக்கு அவ்ளோதானா?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.