Cinema News
‘கோட்’ காப்பினு சொன்னாங்க.. கொஞ்சம் கூட மாத்தாம அப்படியே எடுத்து வச்சிருக்காரே
Goat Movie: கடந்த வாரம் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த கோட் திரைப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 300 கோடியையும் தாண்டி படம் வசூலை பெற்று வருகிறது.
விஜயுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். படத்தின் பாடல்கள் சமீபகாலமாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அப்பா மகன் என இரு வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார். மகன் விஜயை மிகவும் இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக டீ ஏஜிங் டெக்னிக் பயன்படுத்தி வடிவமைத்திருக்கிறார்கள்.
அந்த டெக்னிக் படத்தில் நல்ல முறையில் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. மேலும் படம் ஆரம்பிக்கும் போதே ஜெமினி மேன் என்ற படத்தின் ரீமேக்தான் கோட் என பலரும் கூறி வந்தார்கள். ஆனால் ரீமேக் இல்லை. அதில் பயன்படுத்திய டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறோம். அதனால் அந்தப் படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து எடுத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார் வெங்கட் பிரபு.
ஆனால் படம் ரிலீஸான பிறகு ஏகப்பட்ட படங்களின் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு இந்தப் படங்களின் காப்பிதான் கோட் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கோட் படத்தின் க்ளைமாக்ஸ் கூட ஒரு ஹாலிவுட் படத்தில் வந்த காட்சிதான்.
அதை போல் கோட் படத்தில் அப்பா விஜய் மகன் விஜயை எதிர்த்து சண்டை போடுவது , வில்லனான மோகன் மகன் விஜயிடம் அப்பா இவர்தான் என சொன்ன பிறகும் மகன் விஜய் வில்லனான மோகனை விட்டுக் கொடுக்காமல் பேசுவது என இந்த காட்சி அப்படியே விஜயகாந்த் நடித்த ராஜதுரை படத்தில் அமைந்திருக்கிறது.
அச்சு பிறழாமல் ராஜதுரை படத்தின் காட்சியைத்தான் கோட் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் வெங்கட் பிரபு. அந்த படத்தின் காட்சியைத்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கோட் படத்தையும் வெங்கட் பிரபுவையும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/KABiLANS7/status/1834016585025290287