சிக்னலில் நிவேதா பெத்துராஜுக்கு நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்

Published on: November 7, 2024
---Advertisement---

Nivetha pethuraj: தமிழின் முன்னணி நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் தொடங்கி பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இயல்பிலேயே ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் நிவேதா பெத்துராஜ். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் இவரை சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் வந்தபோது, தைரியமாக அதை எதிர்கொண்டு பல்வேறு தரப்பிலும் பாராட்டு பெற்றவர்.

தற்போது இவர் சாலையின் சிக்னலில் தனக்கு நடைபெற்ற அதிர்ச்சி சம்பவமொன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். சிக்னலில் நின்றபோது 8 வயது சிறுவன் ஒருவன் நிவேதாவிடம் பணம் கேட்டுள்ளான். சும்மா பணம் தர முடியாது என கூற சிறுவன் பதிலுக்கு புத்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டு ரூ.5௦ தருமாறு கேட்டுள்ளான். புத்தகத்தை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்கலாம் என நிவேதா பணத்தை எடுத்தபோது, 5௦௦ ரூபாய் தாளை பார்த்த சிறுவன் புத்தகத்தை தராமல் பணத்தை பிடிங்கிக் கொண்டு ஓடி விட்டானாம்.

இந்த சம்பவம் தனக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது என வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதை பார்க்கும்போது வெறும் 5௦௦ ரூபாய் தானே என நாம் நினைக்கலாம். ஆனால் அவர் அந்த சிறுவனின் செயலை நினைத்து தான் வருத்தம் அடைந்திருப்பார் என்பது அவரின் வார்த்தைகளில் இருந்து தெரிகிறது. எதற்கும் இனி சிக்னல்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் போல.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment