Connect with us

television

பாக்கியாவிற்கு எதிராக கோபி போடும் திட்டம்… கண்ணீரில் மீனா குடும்பம்… அம்மாக்காக கலங்கும் கோமதி..

விஜய் டிவியின் இன்றைய சீரியல்களின் தொகுப்பு

VijayTV: பாக்கியலட்சுமி சீரியலின் பிக்னிக் சென்ற நால்வரும் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பாக்கியா மற்றும் ஈஸ்வரி எந்த கவலையும் இல்லாமல் இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். வீட்டில் கோபி இன்னும் சில தினங்களில் எழிலின் பூஜை இருப்பதாக ராதிகாவிடம் கூறுகிறார்.

அதற்கு ராதிகாவும் சந்தோஷப்படுகிறார். உடனே கோபி அவரை புகழ்ந்து பேசுகிறார். இனியா மற்றும் செழியனை பாக்கியாவிடம் இருந்து பிரித்தது போல எழிலையும் பாக்கியாவிடமிருந்து மொத்தமாக பிரிப்பேன் என கோபி பேசுகிறார். பிக்னிக் முடிந்த அனைவரும் வீட்டிற்கு வர இனியா கோபித்துக் கொள்கிறார்.

சிறகடிக்க ஆசை தொடரில் திருட்டு விஷயம் ஏற்கனவே முத்துவுக்கு தெரியும் என சத்யா தன்னுடைய குடும்பத்தில் சொல்கிறார். அன்று முத்து பேசியதையும் அதற்கு அவர் சொன்ன பதிலையும் கூட சீதா மற்றும் மீனா இருவரும் கோபமடைகின்றனர். வீட்டில் வரும் முத்துவிற்கு இந்த விஷயம் தெரிய அதிர்ச்சி அடைகிறார்.

வீடியோவை காட்ட தயங்கி நிற்கும் முத்துவை பார்த்து ரோகிணி நக்கலாக இருக்கிறார். காவல் நிலையத்தில் இத்தனை நாள் கழித்து வெளியாகின வீடியோவிற்கு காரணம் என்ன என பேசிக்கொள்கின்றனர். மீனா வீட்டிற்கு வரும் முத்து மீனா மற்றும் அவருடைய அம்மா, சீதாவை சமாதானம் செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் செந்திலுக்கு கால் செய்து மீனா தன்னை அலுவலகம் அழைத்து செல்ல வேண்டும் என கேட்கிறார். ராஜி மற்றும் கதிர் இருவரும் சைக்கிளில் கல்லூரி சென்று கொண்டிருக்கும் போது பேசிக் கொண்டிருக்கின்றனர்.

தங்கமயில் அம்மா இருக்கும் பிரச்சனையை பெரிதாக்கி விட்டதாக அவருடைய அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். சொந்த ஊர் குல தெய்வத்துக்கு போனால் அங்கு இருப்பவர்கள் கொடுத்த கடனை கேட்டு சண்டை போடுவார்கள் என கூறுகிறார். கோமதி தன்னுடைய அம்மாவிடம் வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

இதை பார்க்கும் தங்க மயிலிடம் பாண்டியனிடம் சொல்லி விடவேண்டாம் எனக் கேட்க அவர் நான் சொல்ல போறேன் எனக் கேட்க அவரும் அமைதியாகிவிடுகிறார். தங்கமயில் அப்பா கோயில் பிரச்னைக்கு ஐடியாவை கண்டுபிடிக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in television

To Top