அமரன் 5வது நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா… இத்தனை கோடியா?

Published on: November 7, 2024
---Advertisement---

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். சாய்பல்லவி சிவகார்த்திகேயன் ஜோடியாக அற்புதமாக நடித்திருப்பார். இது மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக். ரொம்ப அருமையாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.

படக்குழுவினரை அழைத்து ரஜினி, சீமான் உள்பட பலரும் பாராட்டியுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் முதல்நாளே படத்தைப் பார்த்து கமல், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாளுக்கு நாள் அமரன் படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 140.6 கோடியை வசூலித்துள்ளது. விரைவில் 200 கோடியை எட்டும் என்று தெரிகிறது. இந்திய அளவில் 93.95 கோடியை வசூலித்துள்ளது.

வெளிநாடுகளில் மட்டும் 45 கோடியை அசால்டாகத் தட்டியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 76.9 கோடியை ஈட்டியுள்ளது.

அந்த வகையில் அமரன் படத்தைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சாய்பல்லவியைச் சுற்றித் தான் கதையே நகருகிறதாம். படத்தில் அவரது நடிப்பு மிகச்சிறப்பு என இயக்குனர் மணிரத்னமே வாழ்த்தியுள்ளார்.

இந்தப் படம் சிவகார்த்திகேயன் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். இத்தனைக்கும் படத்தில் வழக்கமான சிவகார்த்திகேயனும் இல்லை. அந்த டைமிங் காமெடிகளும் கிடையாது. சீரியஸான கேரக்டர் தான். ஆனாலும் அர்ப்பணிப்பு உணர்வோடு நடித்து இருந்ததால் படத்தை ரசிக்க வைத்துவிட்டார்.

கோட் வசூல் தெலுங்கானாவில் 12.4 கோடி தான் என்கிறார்கள். ஆனால் அமரன் படம் 16 கோடி வசூலை ஈட்டியது விஜய் ரசிகர்களுக்கே அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு நுழைகிறார் என்பதால் அடுத்து அவரது இடத்தை சிவகார்த்திகேயன்தான் பிடிப்பார் என்றும் பல்வேறு தரப்பினரும் கூறி வருகிறார்கள்.

இதேபோன்று இன்னும் ஒரு சில படங்களில் நடித்தால் சிவகார்த்திகேயன் அவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுவிடும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை நடித்த சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிகமான வசூலை ஈட்டியது இந்தப் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment