Flashback
விஜயகாந்த் அப்பாவுடன் செய்த வாக்குவாதம்… கடைசில அவரு சொன்னதுதான் நடந்துருக்கு..!
விஜயகாந்த் அப்பா அப்படி சொல்லிருக்கக்கூடாதா… ‘சிஎம்’ மா ஆகியிருப்பாரே…
விஜயகாந்தை தமிழ்சினிமா உலகில் கருப்பு எம்ஜிஆர், புரட்சிக்கலைஞர்னு சொல்வாங்க. அவரை யார் பார்க்க வந்தாலும் முதலில் ‘சாப்பிட்டீங்களா…’ன்னு தான் கேட்பாராம். அப்புறம் சாப்பாடு கொடுத்ததும் தான் பார்த்துப் பேசுவாராம். அவரிடம் யாராவது உதவின்னு வந்தா மறுக்காம செய்துவிடுவாராம். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் தங்கராஜ் பிரபல தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணனிடம் விஜயகாந்த் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
விஜயகாந்தை நான் அன்னைக்குக் கூப்பிட்ட மாதிரி தான் ‘நீ, வா, போ’ன்னு கூப்பிடுவேன். அவர் வளர்ந்த காலகட்டத்துல நான் கொஞ்சம் மாற்றணும்னு முயற்சித்த போது ‘வேணாம். நீ மாறாத. அப்படியே பேசு’ன்னு சொன்னாராம் விஜயகாந்த்.
விஜயகாந்த் ஒருமுறை மதுரைக்கு வரும்போது தனது அம்மாவை அழைத்து வந்து விஜயகாந்தைப் பார்க்கச் செய்தாராம் தயாரிப்பாளர் தங்கராஜ். அவரது அம்மாவும் விஜயகாந்துக்காக நாட்டுக்கோழி அடித்து குழம்பு செய்யப் போனார்களாம். ‘அவருலாம் சாப்பிடமாட்டார். சும்மா வா’ன்னு அழைத்துச் சென்றாராம்.
விஜயகாந்தைப் பார்த்ததும் ‘ஆமாய்யா ஆமாய்யான்னு அவரு கன்னத்தைத் தடவி நீ நல்லா வருவேயா’ன்னு சொன்னாங்களாம். அப்புறம் ‘இவன் எங்கேயாவது காணாமப் போயிடுவான்னு சொல்றாங்க. இவனைக் கொஞ்சம் பார்த்துக்கய்யா’ன்னு சொன்னாங்களாம். கடைசி வரை விஜயகாந்த் அவரை விடவே இல்லையாம். கையில புடிச்சிக்கிட்டாராம். அப்படிப் பேசும்போதே தங்கராஜ் இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார். அது இதுதான்.
விஜயகாந்துக்கும், அவரது அப்பாவுக்கும் ஏதோ விவாதம் நடக்குது. நைனா நைனான்னு ஏதோ சொல்றாரு. அப்போ தான் விஜயகாந்த் சொல்றாரு. ‘கதாநாயகனா நடிக்காம நான் வரமாட்டேன்’னு. எனக்குக் கொஞ்சம் தெலுங்கு தெரியும். விஜயகாந்தும் கடைசி வரைக்கும் பிடிகொடுக்காமப் பேசுறாரு. கடைசில அவங்க அப்பா ‘உன் கொடியும் ஒருநாள் தமிழ்நாட்டுல பறக்கும்’னு சொல்றாரு.
சொல்லிட்டு 1000 ரூபாயைக் கையில கொடுக்காரு. அவரு வாங்கலன்னதும் பக்கத்துல இருக்குற யாரு கையிலயோ கொடுக்காரு. அப்புறம் ஆட்டோல ஏறிக் கிளம்பிட்டாரு. அவரு சொன்ன வார்த்தையை நான் டைரில நோட் பண்ணிருக்கேன். ‘உன் கொடியும் ஒரு நாள் தமிழ்நாட்டுல பறக்கும்’னு. அவரு ‘நீயும் ஒருநாள் சிஎம் ஆவே’ன்னு சொல்லியிருக்கக்கூடாதா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.