விஜய் டிவியின் இன்றைய சீரியல் எபிசோட்களின் அப்டேட்கள்

VijayTV: பாக்கியலட்சுமி தொடரில் ஜெனியின் அப்பா பாக்யா வீட்டிற்கு வருகிறார். தன்னுடைய மகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது செழியன் சரியில்லை என இருவரும் பேசுகின்றனர். ஜெனி திரும்பவும் அவருக்கு யாருடனும் பழக்கம் இருக்குமோ என சந்தேகிக்க அதற்கு வாய்ப்பில்லை என்கிறார் ஜோசப்.

ஆயுத பூஜை ஆர்டர் குறித்து செப் கோபியிடம் வந்து சொல்கிறார். அதையும் கெடுக்க இருவரும் திட்டம் போடுகின்றனர். மாஸ்டரிடம் பிராக்டிஸ் எடுத்து நிகழ்ச்சியில் சூப்பராக ஆடிய இனியா முதல் மார்க்கை வாங்குகிறார். இதற்கு தன் தந்தை தான் காரணம் எனக் கூற பாக்யா அதிர்ந்து விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் கோமதியின் அண்ணன்கள் ஆன முத்துவேல் மற்றும் சக்திவேல் வீட்டிற்கு முன்னர் வந்து கத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் பாண்டியன் வந்துவிட அவரும் கோமதி திட்டுவார் என எதிர்பார்க்க தன் மனைவிக்கு ஆதரவாக பேசுகிறார்.

உள்ளே வரும் பாண்டியன் இடம் தனக்கு போக விருப்பம் இல்லை எனவும் கதிர் மற்றும் செந்தில் தான் தன்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாகவும் கூறி விடுகின்றார். ஆனால் இதை பாண்டியன் கண்டுகொள்ளவில்லை. மீனா மற்றும் ராஜி இருவரும் கோமதியிடம் சண்டைக்கு செல்கின்றனர். இதை பார்த்துக் கொண்டிருக்கும் தங்கமயில் கவலை கொள்கிறார்.

சிறகடிக்க ஆசை தொடரில் சிட்டி சத்தியாவின் வீடியோவை லீக் செய்து மீனாவை வாழ விடாமல் செய்ய ப்ளான் போடுகிறார். போனை காணாமல் முத்து கவலையாக இருக்க அதிலிருக்கும் வீடியோ யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதை நினைத்து வருந்தி கொண்டிருக்கிறார். வீட்டில் ரோகிணி, மனோஜ் மற்றும் மீனா மீது பல்லி விழுகிறது.

இதற்கு போனில் பலன் பார்த்து ரோகிணி கூற அவருக்கு லாபம் என்றும், மனோஜ் இருக்கு கவலை என்றும் வருகிறது. மீனாவிற்கு கேட்கும்போது துன்பம் என வர அவர் வருந்துகிறார். இதை எடுத்து மீனாவின் பூ கட்டும் இடத்திலிருக்கும் பெண்கள் அவருக்கு காசை கொடுத்து போன் வாங்க உதவுகின்றனர். அந்த நேரத்தில் விஜயா அந்த வழியாக வர மீனாவுடன் இருக்கும் பெண்கள் அவரிடம் பேசுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *