Cinema News
விடாமுயற்சி ரிலீஸ் எப்போன்னு காத்துக்கிடந்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி…! நியூ அப்டேட்!
ஒரு வழியா சொல்லிட்டாங்கப்பா விடாமுயற்சி ரிலீஸ் டேட்டை..!
விடாமுயற்சி படத்திற்கான போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களைக் குஷிபடுத்தியுள்ளது. தீபாவளியை ஒட்டி டீசர் வரும் என்று சொன்னார்கள். இப்போது படத்தில் இருந்து தெறிக்க விடும் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் அஜீத் கேப் வைத்து, கூலிங் கிளாஸ் போட்டு ஏதோ ரேஸிங்கில் கலந்து கொள்வதைப் போன்ற தோற்றத்தைக் காண முடிகிறது. சற்றே திரும்பிப் பார்க்கும் அவரது ஸ்டைல் படுமாஸாக உள்ளது.
படத்தைப் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் இல்லை. விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸாகும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்தப் போஸ்டர் ஒரு ஆறுதலாகவே அமைந்துள்ளது.
கூடவே கமெண்ட் பாக்ஸில் சம்பவம் உறுதி என்றும் போடப்பட்டுள்ளது. விடாமுயற்சி நோஷன் டிரைலர்னு ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்தப் போஸ்டரில் திரிஷா, அர்ஜூன் ஆகியோரும் உள்ளனர்.
படம் 2025 ஜனவரி 9ல் வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 வருடத்துக்குப் பிறகு அய்யா பொங்கலுக்கு வருகிறாராம். அப்போது அவருக்கு வந்த படம் விஸ்வாசம்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் தல அஜீத் நடித்துள்ள இந்தப் படம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த தேதியும் தள்ளிப் போகாம இருந்தா சரிதான். இப்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்தியன்2, வேட்டையன் பெரிய அளவில் போகவில்லை. அதனால் விடாமுயற்சியை ரொம்பவே நம்பி உள்ளனர்.
அதனால் தான் பார்த்துப் பார்த்துப் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். படம் வெளியாகக் காலதாமதம் ஆகக் காரணம் இதுவாகவும் இருக்கலாம். படத்தின் பெரும்பாலான காட்சி அஜர்பைஜானில் தான் படமாக்கப்பட்டுள்ளதாம்.

படத்தின் இசை அமைப்பாளர் அனிருத். விடாமுயற்சியில் ரெஜினா கசான்ட்ரா, ஆரவ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஓம் பிரகாஷ். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத்துக்கு வர இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கிடக்கின்றனர்.