விஜய் டிவி இன்றைய டாப் சீரியல்களின் தொகுப்பு

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் எல்லோரும் ஸ்டார் ஹோட்டலில் இருக்க மனோஜ்க்கு ஆஃபர் கொடுக்கும் முதலாளி வருகிறார். அவர் எல்லோரிடமும் பேசிவிட்டு மனோஜ்க்கு இந்த பிசினஸை தருவதாக சம்மதம் தெரிவித்து விடுகிறார். இதை எடுத்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

அவர் சென்று விட இந்த சந்தோஷத்தை கொண்டாட சரக்கு பார்ட்டி வைப்பதாக பேசிக் கொள்கின்றனர். அண்ணாமலையை சாப்பிட வைத்து வீட்டிற்கு அனுப்பி விட, மனோஜின் நண்பர் பெரிய பெட்டியுடன் உள்ளே வருகிறார். ஃபாரின் சரக்கு என அவர் கூற முத்து எப்படி இருக்கும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் செழியன் பாக்கியாவிற்கு உதவி செய்யாததை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதனால் பாக்கியாவிடம் எல்லாத்தையும் குடும்பத்திற்கு செலவு செய்யாதே. உனக்காக கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள் என அறிவுரை கூறுகிறார். இதைத் தொடர்ந்து காலையில் வரும் செழியினை பார்த்து பாட்டி கதவை மூடி கொள்கிறார்.

என்ன ஆனது என செழியன் கேட்க நான் பார்த்துக் கொள்கிறேன் நீ வேலைக்கு கிளம்பு என கூறி விடுகிறார். ஈஸ்வரிடம் வந்து என்ன ஆச்சு அத்தை என பாக்கியா கேட்க நான் ராசி இல்லாதவ அதனால் தான் கதவை மூடிக்கொண்டேன் என்கிறார். இதை அடுத்து இனியா கல்லூரியில் டான்ஸ் பிராக்டிஸ் செய்ய மாஸ்டர் வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர். செழியன் மற்றும் எழில் இருவரும் அம்மாவிற்கு உதவி செய்ய முடியாத நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் பாட்டியை நினைத்து கோமதி கவலையில் அமர்ந்திருக்கிறார். இதைதொடர்ந்து தங்கமயிலிடம் கோமதி கோபமாக இருக்கிறார். பின்னர் ராஜி அப்பதாவை நினைத்து கதிரிடம் பேசி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சரவணன் தங்கமயில் மீது கோபமாக இருக்க மீனா அவருக்கு அறிவுரை கூறுகிறார். இதை தொடர்ந்து கோமதி அவருடைய குடும்பத்திற்கு சமைத்து வைத்திருக்க பழனி எடுத்துக்கொண்டு போகும் போது பாண்டியன் பார்த்து விடுகிறார். என்னவென கேட்க கோமதி முழித்துக் கொண்டிருப்பதுடன், இன்றைய எபிசோடு முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *