விஜய் டிவி இன்றைய சீரியல்களின் தொகுப்பு

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் ரோகினி மீனா மற்றும் ஸ்ருதியை அழைத்து மனோஜ் கூறிய விஷயத்தை சொல்கிறார். இதற்கு முதலில் மீனா ஒப்புக்கொள்ளாமல் அதிர்ச்சி அடைகிறார். அதைத் தொடர்ந்து சமாதானம் செய்ய ரோகிணி பிளானுக்கு ஒத்துக் கொள்கின்றனர்.

இதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலை அனைவரும் மாடர்ன் உடையில் பார்ட்டி நடைபெறும் இடத்திற்கு வருகின்றனர். இதில் விஜயா அல்ட்ரா மாடர்ன் ஆக வர அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து மற்ற ஜோடிகளும் வருகின்றனர். முத்து மற்றும் மீனாவை போட்டோ எடுக்க அவருடைய போனை ரோகிணி கேட்க முத்து வேண்டாம் எனக் கூறி சென்று விடுகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் ரெஸ்டாரண்டில் அனைவரும் பிரச்சினை செய்து கொண்டிருக்க என்ன செய்வது என தெரியாமல் பாக்கியா முழித்துக் கொண்டிருக்கிறார். சரியான நேரத்தில் கம்பெனியின் முதலாளி வந்து கேட்ட பணத்தை கொடுத்து அவரை காப்பாற்றி விட்டு செல்கிறார்.

பழனிசாமி பாக்கியாவை அழைத்து என்னிடம் ஏன் உதவி கேட்கவில்லை எனக் கூறி வருத்தப்படுகிறார். எழில் தன்னால் அம்மாவுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என செல்வியிடம் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். செழியன் உதவி செய்துவிடக் கூடாது என்பதற்காக பொய்யை கூறி கோபி அவருடைய ரெஸ்டாரண்டில் உட்கார வைத்து விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் கோமதி அழுது கொண்டிருக்க பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஆனால் பாட்டி மருத்துவமனையில் தன்னுடைய மருமகளுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சக்திவேல் மற்றும் முத்துவேல் வந்துவிட மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *