தளபதி 69ல் இப்படி ஒரு மாற்றமா? அரசியலுக்கு வந்த பிறகு தளபதி அலர்ட்டாதான் இருக்காரு

Published on: November 7, 2024
---Advertisement---

கோட் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்க அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில்தான் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. அதில் விஜய், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ போன்ற பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தான் அவரது கட்சியை தொடங்கினார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை நேரடியாக எதிர் கொள்ள போவதாகவும் தெரிவித்திருக்கிறார் .

அதனால் கட்சியின் மாநாடு குறித்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு முன்பாகவே அவரது கட்சியின் கொடியையும் சின்னத்தையும் அறிவித்து விட்டார் விஜய். தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் ஆரம்பிக்க இருக்கிறார் விஜய்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அவருடைய கடைசி படமான தளபதி 69 படம் குறித்த அப்டேட்டும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. பொதுவாக எச் வினோத் படம் என்றாலே அரசியல் சாயம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் .அதிலும் ஒரு பேட்டியில் ஏற்கனவே விஜய் வைத்து கண்டிப்பாக பொலிட்டிக்கல் கதையில்தான் படத்தை எடுப்பேன் என எச் வினோத் கூறியிருந்தார் .

அதனால் இந்த படம் கண்டிப்பாக விஜயின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் தளபதி 69 படத்தின் கதையில் திடீரென சில மாற்றங்கள் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏனெனில் இந்தப் படத்தின் கதையை பொருத்தவரைக்கும் முதலில் கமலை வைத்து தான் எடுக்க திட்டமிட்டு இருந்தார். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் எல்லாம் நடந்தன. கமல் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அவரின் தலையீடு என்பது நிச்சயமாக இருக்கும்.

அதனால் இந்த படத்தின் கதையிலும் கண்டிப்பாக கமல் தலையிட்டு அவருடைய சில அரசியல் கருத்துக்களை இந்த கதையில் புகுத்தி இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் அந்த கதையில் விஜய் நடித்தால் அதுவும் இப்போது விஜய் அரசியலுக்கும் வருவதால் கமலின் கொள்கை வேறு மாதிரியாக இருக்கும்.

விஜய்யின் அரசியல் கொள்கை வேறு மாதிரியாக இருக்கும். அதனால் கமல் சொன்ன சில காட்சிகள் தவிர்த்து அதில் புதிய மாற்றத்தை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. என்ன இருந்தாலும் அரசியல் என வந்துவிட்டால் ஒவ்வொருவரின் கொள்கைகள் மாறுபட்டு தான் இருக்கும். அதனாலயே இந்த மாற்றம் என சொல்லப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment