பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரோமோ

BiggbossTamil: பிக் பாஸ் சீசன் 8 தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்றைய புரோமோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் ரஞ்சித் போட்டியாளர்களிடம் சண்டைக்கு நிற்கும் காட்சிகள் இடம்பெற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசன் தொடக்கத்திலிருந்து ரசிகர்களுக்கு கன்டன்ட்டை அள்ளி வழங்கி வருகிறது.

நேற்று பெண்கள் அணிக்குள் சண்டை நடந்தது. இதில் தொகுப்பாளினி ஜாக்லின் அழுத காட்சிகளும் இடம் பெற்றது. அது மட்டுமல்லாமல் இன்றைய முதல் ப்ரோமோவிலேயே சின்னத்திரை நடிகர்களான பவித்ரா மற்றும் விஷால் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதை பார்க்கும் போது ரசிகர்கள் ஷாக் ஆகினர்.

இருந்தும் இவர்கள் கண்டன்ட்டிற்காக தேவையில்லாமல் அடித்துக் கொள்வது போல இருப்பதாக கமெண்ட்டுகளும் பறந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் நடிகர் ரஞ்சித் தயாரிப்பாளரான ரவீந்தரை அடிக்க பாய்வது போல காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.

இந்த சண்டைக்கு இடையில் அவர்களை நகர்த்தி விட வந்த நடிகர் அருண்பிரசாத்தை கீழே பிடித்து தள்ளியதும் இடம் பெற்று இருக்க ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் வன்முறையிற்கு இடம் கிடையாது.

இதனால் நடிகர் ரஞ்சித் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது. இன்றைய எபிசோட் வெளியானால் மட்டுமே இந்த பிரச்சனை குறித்த முழு தகவலும் வெளியாகும் என நம்பப்படுகிறது. இருந்தும் இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆர்வத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது ஏற்படுத்தும் என்பதே பலரின் கருத்தாகவும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *