Connect with us

Cinema News

மீண்டும் தள்ளிப் போகிறதா கங்குவா…? இப்படி ஒரு சிக்கல் வரும்னு அவங்களே எதிர்பார்க்கல போல…!

இப்படியே தள்ளிப் போய்க்கிட்டு இருந்தா நாங்க பார்க்குறது எப்படி?

சிறுத்தை சிவா பார்த்து பார்த்து உருவாக்கி வரும் படம் கங்குவா. சூர்யா முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கலக்கி இருக்கிறார். 38 மொழிகளில் படம் வெளியாக உள்ளதாகவும், முதல் ரவுண்டில் 10 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார்.

சூர்யா உடன் பாபிதியோல் ஆக்ரோஷமான வில்லனாக மோதுகிறார். திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, கோவை சரளா காமெடி பட்டாசாய் வெடிக்கின்றனர். கிச்சா சுதிப், ஜெகபதி பாபு, ஆனந்தராஜ் உடன் கே.எஸ்.ரவிகுமாரும் நடித்துள்ளார். படத்தின் பட்ஜெட் 350 கோடியாம். படத்தை முதல்ல அக்டோபர் 10ல் ரிலீஸாக்கத் திட்டமிட்டார்களாம். அதே தேதியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் வருவதால் படத்தின் ரிலீஸை நவம்பர் 14க்குத் தள்ளி வைத்துள்ளார்கள். இப்போது இதற்கும் சிக்கல் வரும் போல என்று ஒரு பிரபலம் சொல்கிறார். என்னன்னு பார்க்கலாமா…

இந்த முறை மழை அதிகமாக இருப்பதால் கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகவும் வாய்ப்பு இருக்கு. சென்னை மாநகராட்சியில இப்பவே ரொம்ப உஷாரா படகுகள் எல்லாம் வாங்கி வச்சிட்டாங்களாம். ஏதோ ஒரு எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருப்பாங்க.

அந்த வகையில இது ஆபத்தான காலகட்டம் தான். இன்னைக்கு சென்னைக் கிடக்குற கெடப்புக்கு நிச்சயமா 100 போட் ஆவது வேணும். அப்படித் தான் எல்லா ரோட்டையும் நோண்டிப் போட்டு வச்சிட்டாங்க. இது மழைக்காலமே என்ற உணர்வு கூட அவங்களுக்கு இல்லை.

என்ன செய்யப்போறாங்க, எத்தனை பேரு போய்ச் சேரப் போறாங்கன்னே தெரியல. இந்த சூழல்ல நீ நீந்தியாவது படம் பார்க்க வான்னா எப்படி வருவாங்க? கொஞ்சம் ரிஸ்க் ஆன தேதியைத் தான் அறிவிச்சிருக்காங்க. எனக்குத் தெரிஞ்சி படம் ரிலீஸ் ஆகற தேதியை இன்னும் தள்ளிப் போடக் கூட வாய்ப்பு இருக்கு. வேற வழியில்லையே என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top