Sivakarthikeyan: அமரன் வெற்றி! ஜிவிக்கு ஸ்பெஷல் பரிசை வழங்கிய சிவகார்த்திகேயன்

Published on: November 9, 2024
gv
---Advertisement---

Sivakarthikeyan:  சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீஸ் ஆக கடந்த 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன். இந்த படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும் மக்களின் அமோக வரவேற்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

ராஜ்குமார் பெரியசாமி முகுந்தின் வாழ்க்கையை தத்துரூபமாக வெள்ளித்திரையில் அதுவும் சிவகார்த்திகேயனை வைத்து சிறப்பாக காட்டி இருக்கிறார். சொல்லப்போனால் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

இதையும் படிங்க: Biggboss Tamil: இந்த சீசனோட ‘வெஷ பாட்டில்’ யாருன்னு தெரியுமா?

தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 80 கோடிக்கும் மேல் வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் வரும் காலங்களில் படத்தின் வசூல் அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சாய்பல்லவி இந்துவாக அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்கு கூடுதல் சிறப்பம்சமாக இருந்தது ஜி.வி. பிரகாஷ் இசையில் அமைந்த பாடல்கள்.

பேக்ரவுண்ட் மியூசிக் படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக அமைந்திருந்தது. ஒட்டுமொத்தமாக படத்தின் கதை, படத்தில் நடிகர்களின் நடிப்பு, இசை என அனைத்துமே மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அவர்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: என்னடா நடக்குது இங்க!.. மழையில் ஆட்டம் போடும் காதல் பறவைகள்.. வீடியோ பாருங்க!..

siva
siva

இதுவரை காமெடி கலந்த படங்களிலேயே நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன் முறையாக ஒரு ராணுவ அதிகாரியாக இந்த படத்தில் நடித்திருந்தார் .இந்த படத்தின் மூலம் அவருக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சிவகார்த்திகேயன் ஜிவி பிரகாஷுக்கு விலை உயர்ந்த கைகடிகாரம் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அந்த ஒரு புகைப்படம் தான் இப்போது வைரலாகி வருகின்றது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.