தளபதி 69 படம் எடுக்க பணம் இல்லையா?!.. இதுக்கா இவ்ளோ பில்டப் பண்ணீங்க!…

Published on: November 10, 2024
---Advertisement---

Thalapathy 69: பொதுவாக எந்த ஒரு தயாரிப்பாளரும் சொந்த பணத்தை போட்டு படமெடுக்க மாட்டார்கள். ஃபைனான்சியரிடம் பணம் வாங்கியே படமெடுப்பார்கள். வியாபாரம் ஆகும்போது அதிலிருந்து வரும் பணத்தை வைத்து வாங்கிய கடனை வட்டியோடு கொடுத்துவிடுவார்கள். இதுதான், திரையுலகில் பல வருடங்களாக இருக்கும் நடைமுறை.

சினிமா எடுக்க பணம் கொடுப்பதற்கென்றே பல ஃபைனான்சியர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அவர்களிடம்தான் பணம் வாங்குவார்கள். பணத்தை சரியான நேரத்திற்கு கொடுக்கவில்லை என்றால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டார்கள். சிலர் நீதிமன்றம் செல்வார்கள். இதுவும் அடிக்கடி நடக்கும்.

இதையும் படிங்க: Actor suriya: சுதா கொங்கரா – எஸ்.கே படத்தில் செம வில்லனாம்!.. அது அந்த நடிகரா?!..

கங்குவா படத்திற்காக வாங்கிய 55 கோடி கடனை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுக்கவில்லை என்பதால் ஃபைனான்சியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சமீபத்தில் அந்த பணத்தை கொடுத்திருக்கிறார் ஞானவேல் ராஜா. தற்போது தளபதி 69 படமும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.

கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். விஜய் அரசியலுக்கு செல்வதாக அறிவித்திருக்கும் நிலையில் இதுதான் அவரின் கடைசிப்படமாகும். எனவே, இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் விஜய் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி இருக்கிறார். தளபதி 69 படத்தை கே.வி.என் என்கிற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்சும் செய்து வருகிறது.

இப்படி 250 கோடிக்கும் மேல் கடனாக கொடுத்திருக்கிறது கே.வி.என்.நிறுவனம். ஆனால், அந்த தொகையெல்லாம் இன்னமும் திரும்பி வரவில்லை. எனவே, விஜய் படத்தை எடுக்க பணமில்லாமல் திணறும் கேவிஎன் நிறுவனம் பிரபல ஃபைனான்சியர் மதுரை அன்பு செழியனிடம் கடன் கேட்டிருக்கிறதாம்.

இதையும் படிங்க: அமரன் பட நாயகி சாய்பல்லவிக்கு தேசியவிருதா? பிரபலம் சொல்றது இதுதான்..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.