Connect with us
vishal

Cinema News

Vishal: சாப்பாடுதான் முக்கியமா?!.. ரோபோ சங்கரை பளாரென அறைந்த விஷால்!.. ஷாக்கிங் நியூஸ்!..

Vishal :தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரோபோ சங்கர். சமீபத்தில் இவரின் மகளுக்கு நடைபெற்ற திருமணம் இந்தியளவில் பேசுபொருளாக மாறியது. முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சின்னத்திரையில் ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பயணித்து வரும் ரோபோ சங்கர் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் தமிழின் முன்னணி நடிகர் விஷால் குறித்து சொன்ன தகவல் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் சுனிதா வாங்கிய ‘சம்பளம்’ இதுதான்!

விஷால் குறித்து ரோபோ சங்கர்,’ ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்ல நானும் விஷால் சாரும் பேசிட்டு இருந்தோம். அப்போ புதுமுக நடிகை ஒருத்தவங்க அன்னைக்கு தான் ஷூட்டிங் வந்துருந்தாங்க. அவங்க முன்னால நான் உங்கள அடிக்கிறேன். நீங்க சும்மா நடிங்கன்னு சொன்னாரு.

சொன்ன மாதிரி ஓங்கி பளார்னு என்ன அறைஞ்சிட்டாரு. எனக்கு கண்ணு கலங்கிருச்சு. உங்களுக்கு ஷூட்டிங் இருக்குன்னு தெரிஞ்சும் சாப்பிட போய் இருக்கீங்க. சாப்பாடு ரொம்ப முக்கியமா? பணத்தை கொட்டி படம் எடுக்குறோம். உங்களுக்கு பொறுப்பேயில்ல.

robo shankar

robo shankar

எப்போ பாத்தாலும் சாப்பாடு சாப்பாடுன்னு. ஒருநேரம் சாப்பிடலன்னா உலகம் அழிஞ்சு போயிருமா? அப்படின்னு என்ன கண்டபடி திட்டினாரு. அநத பொண்ணு அரண்டு போய் சார் எனக்கு டிக்கெட் போடுங்க நான் நெக்ஸ்ட் பிளைட் ல ஊருக்கு போறேன். இவ்வளவு கோபக்காரரா இருக்காரு. ரோபோ சாரையே கைநீட்டி அறைஞ்சிட்டாருன்னு பதறிட்டாங்க, ‘ என்றார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுக்கு பேரு ஜாலி இல்லை. சைக்கோத்தனம். உங்கள அடிச்சி இருக்காரு. அவரை போய் இப்படி பேசிட்டு இருக்கீங்க என கண்டபடி விஷாலை கழுவி ஊற்றி வருகின்றனர். இன்னும் சொல்லாம மறைக்க விஷயங்கள் எவ்வளவு இருக்கோ.. யாருக்கு தெரியும்.

இதையும் படிங்க: Delhi ganesh: மகனுக்கு டெல்லிகணேஷ் கொடுத்த டாஸ்க்… எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் அதை மட்டும் விட்டுட்டாரே..!

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top