Connect with us
trisha

Cinema News

Vijay Trisha: விஜய் இத மாத்திக்கிட்டா நல்லா இருக்கும்.. அப்பவே சொன்ன திரிஷா! அதுக்கு விஜய் பதில பாருங்க

Viajy Trisha: சினிமாவில் மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடி என்றால் அது விஜய் மற்றும் திரிஷா ஜோடிதான். இதுவரை இருவரும் சேர்ந்து ஐந்து படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். அதிலும் கில்லி திரைப்படம் அனைவருக்குமான ஃபேவரைட்டான திரைப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து ஆதி, லியோ, வில்லு போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். லியோ திரைப்படத்தில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு இருவரும் ஜோடியாக நடித்தனர், இதுதான் அவர்கள் ஜோடியாக நடித்த கடைசி படமாகும்.

திரிஷாவின் ஆசை: அதன் பிறகு கோட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு விஜயுடன் சேர்ந்து நடித்தார் திரிஷா. அதுவும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மீண்டும் அப்படிப்போடு பாடல் மாதிரி ஒரு பாடலுக்கு விஜயுடன் ஆட வேண்டும் என ஆசைப்பட்டதாக திரிஷா கூறியிருந்தார். அதை வெங்கட் பிரபு கோட் படத்தின் நிறைவேற்றினார். அந்த பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதையும் படிங்க: Ramyapandian: திருமணம் முடிந்த கையோட ஹனிமூன்!… கணவருடன் ரம்யா பாண்டியன் எங்க போயிருக்காங்க தெரியுமா?!..

லியோ படத்தில் திரிஷா கமிட் ஆனதில் இருந்தே விஜயையும் திரிஷாவையும் இணைத்து பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்தன. அந்த நேரத்தில்தான் விஜயின் மனைவி சங்கீதா லண்டனில் செட்டிலாகினார். ஒருவேளை திரிஷாவால்தான் விஜய் தன் மனைவியை பிரிந்து வாழ்கிறாரோ என்றெல்லாம் வதந்திகள் கிளம்பின. ஆனால் இந்த வதந்திகளுக்கு விஜய் தரப்பிலிருந்தும் திரிஷா தரப்பிலிருந்தும் எந்தவித பதிலும் வரவில்லை.

இந்த குணம் பிடிக்காது: இந்த நிலையில் விஜய் குறித்து திரிஷா கூறிய ஒரு பழைய பேட்டி இப்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றது. அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி டீஸ் பண்ணுவது யார் என்ற கேள்வி திரிஷாவிடம் கேட்க அதற்கு சிம்பு என பதில் அளித்திருந்தார் திரிஷா. மேலும் விஜய் இந்த குணத்தை மாற்றினால் நல்லா இருக்கும் என நீங்கள் நினைப்பது என்ன என்று கேட்கப்பட்டது.

vijay

vijay

அதற்கு விஜய் எப்போதும் தன்னைச் சுற்றி ஒரு வேலியை போட்டுக் கொள்வார். அதுமட்டுமில்லாமல் எப்போதும் அவர் moodyயாகவேத்தான் இருப்பார். ஏன் அப்படி இருக்கிறோம் என அவருக்கு மட்டும்தான் தெரியும். அவரை சுற்றி இருக்கிறவர்களுக்கு தெரியாது அல்லவா? அந்த நேரம் யாரிடமும் பேசமாட்டார். அதனால் அப்படி இருக்க கூடாது. அதை மாற்றினால் நல்லா இருக்கும் என திரிஷா கூறியிருந்தார்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: சொதப்பிய விஜய் சேதுபதி!.. அடங்காத போட்டியாளர்கள்.. ‘கமலை கொண்டு வாங்க பாஸ்’..

உடனே விஜய் நான் அப்படியெல்லாம் கிடையாது என பதில் கூறினார். ஆனால் விஜயுடன் சேர்ந்து பணியாற்றிய பல பேர் சொல்வது இதுதான். விஜய் சைலண்டாகவே இருப்பார் என்றும் சகஜமாக பேசமாட்டார் என்றும்தான் கூறியிருக்கிறார்கள்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top