Cinema News
Kanguava: சொந்த ஊர்ல பிரச்சினை முடிஞ்சு பக்கத்து ஊர்ல பஞ்சாயத்தா? எவ்வளவுதான் தாங்குவாரு ‘கங்குவா’?
Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் கங்குவா. படம் வருகிற 14 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸாக உள்ளது. சூர்யாவின் கெரியரிலேயே கங்குவா திரைப்படம்தான் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அதுவும் மிகவும் பிரம்மாண்ட முறையில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
சிக்கல்: இதற்கிடையில் பட ரிலீஸில் சில சிக்கல்கள் இருந்துவந்தது. இன்னும் ரிலீஸாக இரண்டு நாள்களே உள்ள நிலையில் இன்னும் தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கப்படாமல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. 75: 25 என்ற விகிதத்தில்தான் ஷேரிங் கொடுக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்களிடம் தயாரிப்பு தரப்பிலிருந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் .
இதையும் படிங்க: Ilayaraja: நீங்க பண்றது சரியில்ல!.. இளையராஜாவிடம் கோபப்பட்ட கமல்!.. விஷயம் இதுதான்!…
இதற்கு கொஞ்சம் கூட திரையரங்கு உரிமையாளர்கள் உடன்படாததால்தான் இன்னும் திரையரங்குகள் ஒதுக்கபடாமல் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழக அரசு கங்குவா திரைப்படத்திற்காக சிறப்பு அனுமதி காட்சி அளித்து உத்தரவை பிறப்பித்திருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு இது நடப்பது வழக்கம்தான்.
சிறப்புக்காட்சிக்கு அனுமதி: ஆனாலும் பண்டிகை நாள்களாக இருக்கும் பட்சத்தில்தான் இப்படி சிறப்பு அனுமதி காட்சி அளிக்கப்படும். ஆனால் கங்குவா படம் ரிலீஸாவதோ ஒரு சாதாரண நாளில்தான். இருந்தாலும் எப்படி தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்தது என்று பார்க்கும் போது சூர்யாவே உதயநிதியிடம் இது பற்றி பேசி இப்படி ஒரு அனுமதியை வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இது ஒரு பக்கம் சந்தோஷம் தந்தாலும் தமிழ் நாட்டை தவிற பிற மாநிலங்களில் சிறப்பு காட்சியாக அதிகாலை 4 மணியாக இருக்கும். ஆனால் கங்குவா படத்திற்கு அந்த சிறப்பு காட்சியை ரத்து செய்திருக்கிறார்களாம். கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் எப்போதும் சிறப்பு காட்சியாக அதிகாலை 4 மணி ஷோவாக ஒளிபரப்பப்படும். அதனால் தமிழ் நாட்டிலிருந்து அங்கு போய் படத்தை பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: Vijay: ஆக்டிங் மட்டுமில்ல!.. சின்ன வயசில இருந்தே விஜய்க்கு அந்த ஆசை உண்டு!.. எஸ்.ஏ.சி பேட்டி!…
ஆனால் கங்குவா படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சியை ரத்து செய்துள்ளதாம் கர்நாடகா மற்றும் ஆந்திராவில். ஏனெனில் அங்கு இந்த படத்திற்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அதை நிறுத்தவே இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக அங்கு இருக்கும் அரசு பதில் அளித்திருப்பதாக தெரிகிறது.