latest news
இவன வச்சு எப்படி படம் எடுக்கிறது? சரி வராது.. சூர்யாவுக்காக பேச போய் திரும்பி வந்த சிவக்குமார்
இன்று தமிழ் சினிமாவில் ஒரு போற்றப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. அவரது நடிப்பில் நேற்று கங்குவா திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இதுவரை இல்லாத ஒரு கெட்டப்பில் சூர்யா கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். மேலும் கங்குவா படத்தின் ஸ்கிரீன்ப்ளே நல்லவே இல்லை என்று பலபேரின் கருத்தாக இருந்தாலும் சூர்யாவின் நடிப்பு கொஞ்சம் ஆறுதலை கொடுத்திருக்கிறது.
சூர்யாவின் நடிப்பு: கங்குவா படத்தில் சூர்யாவின் நடிப்பைத்தான் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அவரின் ஆரம்பகாலத்தை எடுத்துக் கொண்டால் சிவக்குமார் ஏகப்பட்ட விஷயங்களை பகிருந்திருப்பார். அதாவது சூர்யாவுக்கு நடிப்புனா என்னான்னே தெரியாது. யார்கிட்டயும் சகஜமா பேசமாட்டான், டான்ஸ் ஆடவும் தெரியாது. இவனெல்லாம் எப்படி சினிமாவில் உருப்பட போறான் என்றுதான் சிவக்குமார் நினைத்துக் கொண்டிருந்தாராம்.
இதையும் படிங்க: போங்கப்பா நீங்களாம் தாங்க மாட்டீங்க… மீண்டும் சிறுத்தை சிவாவின் ஸ்கெட்ச்…
ஆனால் சூர்யாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போனது. ஆக்ஷனு கேட்டால் புலியா மாறி விடுகிறார் சூர்யா. இந்த நிலையில் சூர்யாவின் நந்தா படம் எப்படி உருவானது என்பதை பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. பாலா முதன்முதலில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் சேது. விக்ரம் நடிப்பில் வெளியான அந்தப் படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
சூர்யாவுக்காக பரிந்துரை: சேது படத்தில் விக்ரமுக்கு அண்ணனாக நடித்திருப்பவர் சிவக்குமார். அதனால் பாலாவுக்கும் சிவக்குமாருக்கும் இடையே நல்ல ஒரு நட்பு உருவானதாம். உடனே பாலாவை அழைத்துக் கொண்டு ஆஸ்கார் தயாரிப்பாளரிடம் போய் நிறுத்தியிருக்கிறார். அவரிடம் சிவக்குமார் ‘என் பையனை வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும். இவர்தான் இயக்குனர்’ என பாலாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க: என்கிட்ட இருந்து போகும் போது இப்படித்தான் போகனும்.. அஜித் சொன்ன விஷயம்
தேவையில்லாத சண்டை: ஆஸ்கார் ரவிச்சந்திரனோ பாலாவிடம் ‘எத்தனை அடி எடுப்பீங்க’ என கேட்க, அதற்கு பாலா தெரியாது என பதில் கூறியிருக்கிறார். சரி எத்தனை நாளில் சூட்டிங் முடிப்பீங்க என ஆஸ்கார் ரவிச்சந்திரன் கேட்க அதற்கும் பாலா தெரியாது என சொல்லியிருக்கிறார். உடனே ஆஸ்கார் ரவிச்சந்திரன் சிவக்குமாரை அழைத்து ‘இவரெல்லாம் செட்டாகாது. இவருடன் சேர்ந்து படம் பண்ணினால் கண்டிப்பா பிரச்சினைதான் வரும். அது உங்களுக்கும் எனக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும்’ என சொல்லி மறுத்துவிட்டாராம்.
அதன் பிறகு அந்தப் படம் வேறொரு தயாரிப்பாளரிடம் போக அதுதான் நந்தாவாக உருவெடுத்திருக்கிறது. நந்தா படத்திற்கு பிறகுதான் சூர்யாவின் நடிப்பு வெளிப்பட்டது. ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கமெர்ஷியல் மெட்டிரீயலாக மாறினார் சூர்யா.