Biggboss tamil: பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் சினிமாவில் பெரிய பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் தான் உள்ளே வருகின்றனர். ஆனால் இதுவரை பெரிய அளவிலான எந்த வளர்ச்சியும் அவர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் சிலருக்கு இந்த வாய்ப்பால் நல்ல விஷயங்களும் நடந்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் தொடங்கி இதுவரை ஏழு சீசன் முடிந்திருக்கிறது. எட்டாவது சீசன் தொடங்கி நடந்து வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த சீசன் உடன் வெளியேறினார். அவருக்கு பதில் தற்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர்களோட ‘சம்பளம்’ இதுதான்!
பொதுவாக பிக் பாஸ் தமிழ் சீசர்களின் அதிக அளவு நெகட்டிவிட்டியை சம்பாதித்தது என்னவோ ஆண் போட்டியாளர்கள் தான். ஏழாவது சீசன் பிக் பாஸில் மட்டுமே அதிக அளவிலான பெண் போட்டியாளர்கள் இந்த எண்ணிக்கைக்குள் வந்தனர்.
அதில் முக்கியமாக ரசிகர்களிடம் பெரிய அளவில் திட்டு வாங்கியது பூர்ணிமா மற்றும் மாயாதான். இதில் மற்ற சீசன்களில் சில போட்டியாளர்கள் அதிகளவு வெறுக்கப்பட்டாலும் அவர்கள் இரண்டாவது இடத்தையாவது பிடிப்பார்கள். ஆனால் ஏழாவது சீசனில் மட்டுமே போராடிக் காப்பாற்றிக் கொண்டு வந்த மாயா மற்றும் பூர்ணிமா இரண்டாவது இடத்தை கூட பிடிக்கவில்லை.
பைனலுக்கு முன்னே பூர்ணிமாவும், மூன்றாவது இடத்தை மாயாவும் தக்கவைத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வெளியில் சென்று பெரிய அளவில் எதிர்ப்பை சம்பாதித்து வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் தங்களுடைய பணிகளில் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் மாயா தற்போது பிக் பாஸ் சீசன் 8 தன்னுடைய சமூக வலைதளங்களில் ரிவ்யூ செய்து வருகிறார்.
இதையும் படிங்க: Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்?
இந்நிலையில் அவர் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் நேற்று போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் நான் ஒரு விஷயத்தை பல நாட்களாக சொல்லாமலே இருக்கிறேன். அந்த அழகான நாட்களை கெடுக்க வேண்டாம் என்பதற்காக அதை வைத்திருக்கிறேன். ஆனால் தற்போது அதை சொல்ல வேண்டிய நிலை.
கோட் படத்தின் ஷூட்டிங்கில் பிக் பாஸ் விட்டு வெளியில் வந்தவுடன் நடிகர் விஜயை நான் சந்தித்தேன். அவர் என்னிடம் நலம் விசாரித்து, நன்றாக விளையாடியதாக பாராட்டினார். என் அக்காவிடமும் நான் நன்றாக விளையாடியதாக ஆறுதல் கொடுத்தார். அவர் அதை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

ஆனால் ரொம்பவே சின்ன நடிகரான எனக்கு அதை அவர் செய்தார். எல்லாம் ஓகே தானேம்மா என அவர் கேட்டது இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது. அதற்காகவே இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாக தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அதிசயமாக இந்த பதிவிற்கு மாயாவிற்காக விஜய் ரசிகர்கள் ஆதரவாக ட்வீட் போட்டு வருவதை பார்க்க முடிந்தது.
மாயா கிருஷ்ணனின் பதிவைக் காண: https://x.com/maya_skrishnan/status/1857473319806840982
