கங்குவா போட்ட போடு!.. கண்ணுலையே கலவரம் தெரியுதே?!.. ஆர்.ஜே பாலாஜி என்ன சொல்லிருக்காரு பாருங்க!..

Published on: November 23, 2024
rj balaji
---Advertisement---

விமர்சனம் செய்வது அவரவர்களின் சுதந்திரம் ஆனால் ஒருவரை டார்கெட் செய்து அடிப்பது பயத்தை ஏற்படுத்துகிறது என்று ஆர் ஜே பாலாஜி கூறி இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருகின்றார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முதலில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி பின்னர் எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கின்றார்.

Also Read

இதையும் படிங்க: Vijay: தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு தடபுடல் விருந்து… அசத்தும் விஜய்!

மற்ற இயக்குனர்களின் இயக்கங்களில் மட்டும் இல்லாமல் மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக இயக்குனராகவும் கவனத்தை பெற்றிருந்தார். அந்த வகையில் அடுத்ததாக சூர்யாவின் சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இதற்கு இடையில் அவர் கமிட்டாகி நடித்திருக்கும் திரைப்படம் சொர்க்கவாசல்.

இந்த திரைப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கி இருக்கின்றார். வரும் 29ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் ட்ரைலர் இன்று ரிலீஸ்-ஆனது அதை தொடர்ந்து ட்ரெய்லர் லான்ச் நிகழ்ச்சி சென்னையில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டு இருந்தார்கள்.

sorgavasal
sorgavasal

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது. இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி இந்த நிகழ்ச்சியில் சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது ‘ஒரு பொருளின் தரத்தை விமர்சிப்பது போல ஒரு படத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அது அவர்களின் சுதந்திரம். அதற்காக ஒவ்வொருவரின் போனையும் போய் நாம் புடுங்க முடியாது.

அந்த கட்டுப்பாடு நம்மிடம் கிடையாது. ஒரு படம் நன்றாக இருந்தால் மீடியாவும் மக்களும் அதை சிறப்பாக்குவார்கள். ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து நான் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்த போது என் விநியோகிஸ்தர் எஸ் ஆர் பிரபு மீதான கடுப்பில் என்னை பலரும் திட்டுறாங்க. திருப்பி இந்த பக்கம் பார்த்தா வேற யாரு மேலையோ இருக்குற கோவத்துல என்னைய திட்டுறாங்க.

அப்புறம் இவன் ஒரு பாவாடை, இவன் படத்தை அடிக்கணும்ங்குறாங்க. நான் பாவாடை இல்லன்னு சொன்னா சங்கின்னு சொல்லுவாங்க. எல்லாருக்கும் ஒரே ஒரு ரெக்வெஸ்ட். நீங்க அரசியல் பண்ணனும்னா அரசியல் பண்ணுங்க. சினிமால எதுக்கு வாராவாரம் வெளியாகும் படங்களை விமர்சித்து எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க.

இதையும் படிங்க: டைட்டில் தொடங்கி படத்தின் ரிலீஸ் வரை!.. சூர்யா 44-க்கு சுடச்சுட அப்டேட் கொடுத்த கார்த்தி சுப்புராஜ்!…

அதேபோல ரஜினி, விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள் அடுத்தடுத்து வீணாக சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம். அனைத்து படங்களையும் போய் பார்த்து அவர்கள் விமர்சனங்களை பதிவு செய்யலாம். ஆனால் ஒருவரை டார்கெட் செய்து அடிப்பது பயமா இருக்கு. ஒரு நல்ல படம் எடுத்திருக்கோம். எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க. நீங்க சப்போர்ட் பண்ணா தான் ஒரு லப்பர் பந்து, வாழை மாதிரி இதுவும் எல்லார்கிட்டயும் போய் சேரும் என்று பேசியிருக்கின்றார்.