Lubber Pandhu: கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படம் லப்பர் பந்து. ஹரீஸ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்த இந்தப் படத்தை பச்சை முத்து தமிழரசன் இயக்கினார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவசிகா, பாலா சரவணன், காளி வெங்கட், கீதா கைலாசம், தேவதர்சினி, ஜென்சன் திவாகர் ஆகியோரும் படத்தில் நடித்திருந்தனர்.
ஷான் ரோல்டன் இசையில் படத்தில் அமைந்த பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இரு குரூப்களுக்கு இடையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி இந்தப் படம் வெளியானது. கடைசியில் ஒரே குரூப்பில் மாமனாரும் மருமகனும் விளையாட அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை. இதில் அழகான காதல் கதையும் உள்ளடங்கும். வாழ்வியல் எதார்த்தத்தையும் சேர்த்து இந்தப் படத்தில் அழகாக காட்டியிருப்பார் இயக்குனர்.
இதையும் படிங்க: ரோகிணிக்கு விஜயா வைத்த சூப்பர் செக்.. ராதிகாவை விளாசிய இனியா.. தங்கமயிலின் திட்டம்!..
மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பட்ஜெட்டையும் தாண்டி அதிக வசூல் பெற்றது. அதுவும் இந்த வருடம் வெளியான படங்களில் பெரிய பட்ஜெட்டில் வெளியான படங்களை விட குறைவான பட்ஜெட்டில் வெளியான படங்களே தியேட்டரில் அதிக நாள்கள் ஓடியது. அதில் லப்பர் பந்து பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

பொதுவாக சினிமாவில் சமீபகாலமாக ஒரு முறை இருக்கிறது. ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்தப் படத்தின் இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் படத்தின் தயாரிப்பாளர் கிஃப்ட் கொடுப்பது வழக்கமாகிவிட்டது. அப்படி லப்பர் பந்து பட இயக்குனருக்கு என்ன கிஃப்ட் கிடைத்தது என்று பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். லப்பர் பந்து படத்தின் வெற்றி மற்ற மொழி சினிமாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதனால் மற்ற மொழிகளில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய முண்டியடித்துக் கொண்டு வந்தனர். இந்தப் படத்தை 2 கோடிக்கு ரைட்ஸ் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் லப்பர் பந்து பட இயக்குனருக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் பச்ச முத்த தமிழரசனை அழைத்து இந்தப் படத்தின் ரைட்ஸை 10 லட்சத்துக்கு வாங்கியிருப்பதாகவும் உனக்கு 4 % என 4 லட்சம் கொடுப்பதாகவும் கூறினாராம்.
இதையும் படிங்க: ‘கங்குவா’ படத்துக்கு விதை நான் போட்டது.. யாராச்சும் இத செஞ்சீங்களா? ஆவேசமான கூல் சுரேஷ்
இதில் பச்சமுத்த தமிழரசன் பெரும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார். உடனே எனக்கு இந்த 4 லட்சமும் வேண்டாம் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் எனக்கும் இந்த ரைட்ஸுக்கும் சம்பந்தமில்லை என்று எழுதியும் கொடுத்து வந்துவிட்டாராம் பச்சமுத்த தமிழரசன்.
