Connect with us
sivaji rajni

Cinema History

ரஜினியின் வேகமான ஸ்டைல்… வியந்து போன சிவாஜி அவருக்காக செய்த விஷயம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும், ரஜினிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. என்னன்னா இவரது இயற்பெயர் வி.சி.கணேசன். சினிமாவுக்காக சிவாஜிகணேசன். ரஜினியோட இயற்பெயர் சிவாஜி ராவ். படத்திற்காக ரஜினிகாந்த். சிவாஜி என்ற பேருல ஒற்றுமை. ரஜினியும், சிவாஜியும் இணைந்து நடிக்கிறாரு. அதுல ரஜினிக்கு சிவாஜி என்ன பண்றாருன்னு பார்ப்போம்.

நடிகர் திலகத்தைப் பொருத்தவரை ஒருவர் நல்லா நடிச்சாருன்னா ரொம்ப ரசிப்பார். ரொம்ப நல்லா பண்ணுனா பாராட்டுவார். அவங்க நடிப்புல சிக்கல் இருந்தா சொல்லிக் கொடுப்பார்.

Also read: Samantha: என் Ex-க்கு நான் கொடுத்த காஸ்ட்லியான கிஃப்ட்.. அநாவசிய செலவு பற்றி சமந்தா சொன்ன பதில்

சபாஷ்மீனாவில் சந்திரபாபுவுக்கும், திருவிளையாடல் படத்தில் நாகேஷூக்கும் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப்புகளை விட்டுக் கொடுத்தார். அப்படிப்பட்டவர் ரஜினியுடன் நடித்த படம் நான் வாழ வைப்பேன். 1974ல் மஜ்பூர்னு ஒரு இந்திப்படம். அது அங்கு சக்கை போடு போட்டது.

அதை கே.ஆர்.விஜயா தமிழில் சொந்தமாக தயாரிக்கிறார். அதுதான் நான் வாழ வைப்பேன். இந்தப் படத்தில் சிவாஜி தான் ஹீரோ. கே.ஆர்.விஜயா ஹீரோயின். படத்தில் முக்கியமான ஒரு ரோல் கடைசியில் வருகிறது. அது ஹீரோவுக்கு சமமான ரோல். அதுல யார் பண்ணலாம்னு பார்க்கும்போது சிவாஜியே ‘ரஜினியைப் போடுங்கப்பா. அவன் ரொம்ப நல்லா பண்றான்னு கேள்விப்பட்டேன்.

நல்லா துடுதுடுப்பா படபடப்பா ஸ்டைலா பண்றான்பா. ரொம்ப வித்தியாசமா இருக்குப்பான்’னு சொன்னாரு. அப்புறம் தான் ரஜினி ‘ஓகே’ ஆனாரு. இந்தப் படத்துல எல்லா பாட்டும் ஃபேமஸ். ரஜினிக்கும் ஒரு பாட்டு வச்சிருப்பாரு. ‘ஆகாயம் மேலே’ என்ற பாடல். இந்தப் படத்துல முதல் பாதியில ரஜினி வர மாட்டாரு. 2வது பாதிலயும் கடைசி 20 நிமிஷம் தான் வருவாரு. அதுவும் ரொம்ப ஸ்பீடா ஸ்டைலா அசால்டா நடிச்சிருப்பாரு. படமே களைகட்டும்.

Nan vaazha vaipen

Nan vaazha vaipen

முதல் பாசிட்டிவ்ல போட்டுப் பார்க்கும்போது கடைசில தான் தெரியுது. ரஜினி ஹீரோவா, சிவாஜி ஹீரோவான்னு சந்தேகம் வருது. கடைசி சீன்ல ரஜினி சிவாஜியை தூக்கி சாப்பிட்டுறாரு. சிவாஜியும் இறந்துடறாரு.

Also read: குட் பேட் அக்லி டீமுக்கு நோ சொன்ன அனிருத்… உள்ளே வரும் முக்கிய பிரபலம்…

படம் முடிச்சிட்டு சிவாஜி காருல போறாரு. அப்போது இயக்குனர் ‘படத்துல ரஜினி வர்ற சீன்ல ஒரு பத்து நிமிஷம் குறைச்சிருவோமா’ன்னு கேட்டுள்ளார். ‘ஒரு அடி கூட குறைக்கக்கூடாது. அவன் வளர்ந்து வர்ற பையன். நல்லா நடிச்சிருக்கான். நான் 30 வருஷமா நடிச்சிட்டேன். அவன் நல்லா வளரட்டும்’னு சொல்லி ஆசிர்வதித்தார்.

அந்த இடத்தில் வேறு யாராவது இருந்தால் அப்படி சொல்வார்களா? அந்த காரணத்தால் தான் ரஜினி அவரை கடைசி வரைக்கும் அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தார். படையப்பா படத்தில் நடிக்கும்போது கூட அப்படி கவனித்தார். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top