Cinema News
Dhanush: இவர் இருக்கிற தைரியத்துலதான் இந்த கபடி ஆட்டமா? ‘போர்த்தொழில்’ இயக்குனரை பலியாடாக மாற்றிய தனுஷ்
Dhanush: தனுஷ் இப்போது இட்லி கடை என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்போது படக்குழு வெளிநாடு சென்று இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். ஏற்கனவே அருண் விஜய்க்கு ஒரு செகண்ட் இன்னிங்ஸை தந்த படமாக என்னை அறிந்தால் திரைப்படம் தான் அமைந்தது .
ஏனெனில் அந்தப் படத்திலும் அவர் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இப்போது தமிழில் தனுஷுக்கு வில்லனாக இட்லி கடை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இட்லி கடை படத்திற்கு பிறகு தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது. ஆனால் இதற்கு முன் தனுஷ் வேறொரு இயக்குனருடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.
இதையும் படிங்க: Jayam Ravi: வில்லனாக நடிக்க இத்தனை கோடியா? சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க இதான் காரணமா?
போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் உடன் தான் அடுத்த படத்தில் நடிப்பதாக கூறியிருந்தாராம் .போர் தொழில் வெற்றிக்கு பிறகு அதே இயக்குனருடன் அசோக் செல்வன் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்ததாம். அந்த படத்தை அசோக் செல்வன் சகோதரி தயாரிப்பதாகவும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததாம். இதற்கிடையில் தனுஷ் புகுந்து அந்த இயக்குனரை தன் பக்கம் எழுத்து வேல்ஸ் தயாரிப்பில் நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் எனக் கூறி இவர் பக்கம் இழுத்திருக்கிறார்.
சரி அசோக் செல்வனும் அந்த படத்தை முடித்துவிட்டு வரட்டும் என காத்திருந்தாராம். ஆனால் அமரன் திரைப்படத்தின் வெற்றியால் ராஜ்குமார் பெரியசாமியை வேறொரு இடத்தில் வைத்தது .அதனால் தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைய வேண்டும் என ஆசைப்பட்டு இட்லி கடை பணத்திற்கு பிறகு இப்போது அவருடன் சேர்ந்து படம் பண்ண இருக்கிறார்.
இதையும் படிங்க: பக்தி முத்திடுச்சு போலேயே!.. மனைவி ஜோதிகாவுடன் மூகாம்பிகை கோவிலுக்கு சென்ற சூர்யா!..
இதில் நிற்கதியாக நின்ற விக்னேஷ் மீண்டும் அசோக் செல்வனிடம் சென்று படத்தை ஆரம்பிக்கலாம் என சொல்லி இருக்கிறாராம். இன்னொரு பக்கம் வேல் ஐஸரி கணேஷ் ஏற்கனவே தனுஷுக்கு 50 கோடி சம்பளம் கொடுத்து உடனே கால்ஷீட் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் போட்டிருந்தாராம்.ஆனால் இட்லி கடை படத்திற்கு பிறகு அவர் மதுரை அன்பு தயாரிப்பில் தான் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் படம் பண்ண இருப்பதாக சொல்லப்படுகிறது .
அதனால் ஐசரி கணேஷிடமிருந்து தனுஷுக்கு ஏதாவது நோட்டீஸ் வருமா என்ற நிலைமை இருக்கிறதா என்றால் இல்லை. ஏனெனில் அந்தப் படத்தை மதுரை அன்பு தயாரிப்பதால் அவரை எதிர்த்து இங்கு யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற தைரியத்தில் தான் தனுஷ் துணிந்து இந்த முடிவை எடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் சொல்லப்படுகிறது.