தனுஷோட ஐடியாவுக்கு வாய்ப்பே இல்லாமப் போயிடுச்சே… ரஜினி விஷயத்தில் இப்படியா ஆகணும்?

Published on: November 28, 2024
dhanush Rajni
---Advertisement---

தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் 2004ல் நடந்தது. அதன்படி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகவே பிரியலாம் என்ற முடிவுக்கு வந்தனர். எப்பவுமே கோர்ட் சீக்கிரத்தில் விவாகரத்தை வழங்காது. தம்பதியருக்குக் கவுன்சில் கொடுப்பாங்க. இரு தரப்பினரையும் பேச வைப்பாங்க.

Also read: சைலன்ட்டா சம்பவம் செஞ்ச லக்கி பாஸ்கர்!.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி கலெக்ஷனா?..

எதற்குமே ஒத்து வரலைன்னா தான் இருவருக்கும் விவாகரத்து வழங்கும். அந்த வகையில் நேற்று சென்னை குடும்பநல கோர்ட் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது. இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார்னு பாருங்க.

தனுஷ, ஐஸ்வர்யா விவாகரத்து வி’யத்தில் ரஜினிக்கு தீராத மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கும். பசங்களுக்காகவாவது விட்டுக் கொடுத்து இருவரும் சேர்ந்து இருக்கலாம்.

யாத்ரா, லிங்கா இருவரும் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டனர். இவர்கள் இப்போது ரஜினியின் ரீமேக் படங்களில் நடிக்கும் வகையில் வளர்ந்து விட்டனர். தனுஷ், ரஜினியை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஒரு ஐடியாவோட இருந்தார். இப்போது பொண்ணையே வேணாம்னு சொல்லி விட்டார். அதுக்கு அப்புறம் அவரை வச்சி எப்படி படம் பண்ணுவாரு?

Rajni ishwarya dhanush
Rajni ishwarya dhanush

அப்படியே பண்ணினாலும் ஏகப்பட்ட விமர்சனத்துக்கு ஆளாகும். ஆனா அப்படி படம் பண்ண மாட்டாரு. அதுக்கு வாய்ப்பு இருக்காது. ரஜினியே இன்னும் நாலஞ்சு படத்துக்கு அப்புறம் ஓய்வு எடுத்துருவாரு.

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரியறதுக்கு என்ன காரணம் என்று பொதுவெளியில் பேச வேண்டிய அவசியமில்லை. வீட்டுக்குள் நடக்குற விஷயத்தை வெளியில் சொல்லத் தேவையில்லை. இது கூட அவர்கள் பொதுவெளியில் பகிர்ந்ததால் தான் சொல்ல வேண்டியுள்ளது. அவர்களது பிரிவுக்கு இதுதான் என்று இட்டுக்காட்டிப் பேசறதும் சரியாக இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2017ல் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. ஆனால் சௌந்தர்யா 2வதாக விசாகன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

Also read: சூட்டிங் வராம தில்லாலங்கடி பண்ணுன கார்த்திக்… வழிக்குக் கொண்டு வர தயாரிப்பாளர் செய்த ஐடியா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர். அமைதியானவர். எளிமையானவர். எவ்வளவு உச்ச நடிகராக இருந்தபோதும் எந்த வித பந்தாவும் இல்லாதவர். அவருக்கு இரு மகள்கள். அவர்களுக்கும் விவாகரத்து ஆகி விட்டதே என்ற மன உளைச்சல் கண்டிப்பாக இருக்கத் தான் செய்யும்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.