கர்மா வட்டியுடன் திரும்பி வரும்!.. நயனின் இன்ஸ்டா ஸ்டோரி!.. தனுஷ் மீது கோபம் தீரல போல!.

Published on: November 29, 2024
dhanush nayanthara
---Advertisement---

Nayanthara dhanush: தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக நயன்தாரா இருக்கிறார். கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து ஐயா படம் மூலம் அறிமுகமாகி விஜய், ரஜினி, சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். ஒரு கட்டத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கினார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷின் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. நயன்தாராவை உஷார் செய்ய யோசித்து விக்கி காட்சிகளை வைத்து படத்தை எடுத்து ஷூட்டிங்கில் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்குறதுல இருக்கிற பிரஷர்?.. என்ன பில்லா பட இயக்குனர் இப்படி சொல்லிட்டாரு!..

அதோடு, படத்தின் பட்ஜெட்டும் அதிகரித்து சென்றது. விக்கி – நயன் லவ் ஸ்டோரியை கேள்விப்பட்டு கடுப்பான தனுஷ் இனிமேல் இந்த படத்திற்கு நான் செலவு செய்ய மாட்டேன் என சொல்ல, காதலரின் கெரியருக்காக நயனே தனது மீதி பணத்தை கொடுத்து படத்தை முடிக்க உதவி செய்தார்.

படம் ஹிட் என்றாலும் கோபத்தில் விக்கி – நயன் கூட பேசுவதை நிறுத்திக்கொண்டார் தனுஷ். இந்நிலையில்தான், நெட்பிலிக்ஸ் நிறுவனத்தில் விற்ற தன்னுடைய திருமண ஆல்பம் தொடர்பான வீடியோவில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை சேர்த்ததற்காக 10 கோடி கேட்டு தனுஷ் அனுப்பிய நோட்டீஸ் நயனை கோபப்படுத்தியது.

nayan wedding
#image_title

எனவே, தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் நயன். ‘நீங்கள் உங்கள் அண்ணன், அப்பா மூலம் சினிமாவுக்கு வந்தவர். நானும் தானாக வளர்ந்தவள். நீங்கள் ஒரு சைக்கோ’ என்றெல்லாம் திட்டினர். ஆனால், தனுஷ் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. தற்போது தனுஷ் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

story
#image_title

இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘நீங்கள் பொய்கள் மூலம் ஒருவரின் வாழ்க்கையை அழிக்கும் போது அது கடன் போல மாறி வட்டியுடன் உங்களிடம் திரும்பி வரும் என கர்மா சொல்கிறது’ என பதிவிட்டிருக்கிறார். கண்டிப்பாக தனுஷின் மீதான கோபத்தையே நயன்தாரா காட்டியிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.